Thursday 25 August 2016

விடுப்பு... சம்பள பிடித்தமும்... தீர்வும்...

Image result for case solved

2015 அக்டோபர் முதல் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு விடுப்புச்சம்பளம்
LEAVE ENCASHMENT முழுமையாக வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்... ஒரு சில ஊழியர்களுக்கு..., 
பென்சன் திருத்தம் காரணமாக ஊதிய பிடித்தம் வந்தது.
இப்பிரச்சனை... DOT துறை CCA பிரிவால் கண்டறியப்பட்டு, இதை 
சரி செய்திட வலியுறுத்தப்பட்டது.

இதன் காரணமாக... ஜனவரி 2016 முதல் ஓய்வு பெறும் ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகளின் விடுப்புச்சம்பளத்தில்..., (LEAVE ENCASHMENT) 30
சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.

ஓய்வு பெறும் ஊழியர்கள் அவர்களது சம்பளம் கூடுதலாகவோ..., தவறுதலாகவோ கணக்கிடப்பட்டிருந்தாலோ..., அல்லது பிடித்தங்கள்
செய்ய வேண்டியிருந்தாலோ நிறுத்தி வைக்கப்பட்ட
30 சதவீத விடுப்புச்சம்பளத்தில் பிடித்தம் செய்து கொண்டு...,
ஓய்வூதிய உத்திரவு வந்த பின்பு மீதித்தொகை 
பட்டுவாடா செய்யப்பட்டது.

இந்நிலையில்... மாநில சங்கத்தின் வழிகாட்டுதல் படி... 09-05-2016 அன்று...
நமது மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் மற்றும் மாநில உதவி
செயலர் தோழர். G.வெங்கட்ராமன் ஆகியோர் மாவட்ட துணைப் பொது
மேலாளர் (நிதி) திரு. M.முத்துசாமி அவர்களை சந்தித்து...,
இது நாள் வரையுள்ள... நடைமுறையை... மாற்றுவது சரியல்ல என்றும்
ஓய்வு பெறும் தோழர்களுக்கு முழுமையான விடுப்புச்சம்பளம்
வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.

நமது கோரிக்கையை நியாயம் என உணர்ந்த மாவட்ட நிர்வாகம்...,
மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதலோடு.., மூன்று மாத காலத்திற்குள்..,
பிடித்தம் செய்யப்பட வேண்டிய ஊழியர்களை கண்டறிந்து...,
இப்பிரச்சனை... சரி செய்யப்பட்டு... 31-08-2016 முதல் 
ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு முழுமையான விடுப்புச்சம்பளம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து... 24-08-2016 அன்று நமது மாவட்ட செயலர்
தோழர். C.பாலகுமார், மாநில உதவி  செயலர் தோழர். G.வெங்கட்ராமன்,
மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ், மாவட்ட அமைப்பு செயலர்
தோழர். S.R.செல்வராஜ் ஆகியோர் மாவட்ட துணைப் பொது மேலாளர்
(நிதி) திரு. M.முத்துசாமி அவர்களை சந்தித்த போது...,
31-08-2016 முதல் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு முழுமையான விடுப்புச்சம்பளம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

நமது கோரிக்கையை ஏற்று..., உறுதி அளித்த...
மூன்று மாத காலத்திற்குள்... 
நடவடிக்கை எடுத்து... நடைமுறை படுத்திய... 
மாவட்ட நிர்வாகத்திற்கும்...! 
நடைமுறைக்கு வித்திட்ட... மாநில சங்கத்திற்கும்...!    
நமது நன்றி...!! பாராட்டுக்கள்...!!

No comments:

Post a Comment