Monday 30 May 2016

அறுபதும்..., நூறாகும் - உன்
தொடர் பணியாலே...! 
வாழ்க... பல்லாண்டு...!!


திருவையாறு கண்டெடுத்த திருமகனே...
எங்கள் தமிழ் மாநில சங்கத்தின் தலை மகனே...

கல்வியில் கற்றது கணிதம் - அதுவே
தொழிற்சங்கத்தில் கற்ப்பித்தல் என்றால் புனிதம்

கொள்கை என்றால் குன்று...
குணம் என்றால் நன்று...
      
சிந்தனை என்றால் சிவப்பு...
சீற்றம் என்றால் நெருப்பு...

கருத்து என்றால் தென்றல்...
களம் என்றால் புயல்...

ஞானையாவின் ஞானம் பெற்றவனே...
குப்தாவின் குணம் கொண்டவனே...     

ஜெகன் இல்லம் தந்தவனே...
ஜெகன் உள்ளம் கொண்டவனே...  

இயக்கத்தை நேசித்தவனே ...
இயக்கத் தோழர்களால் நேசிக்கப்பட்டவனே...

ஒலிக்கதிர் இதழுக்கு பொன் விழா கண்டவனே...
NFPTE இயக்கத்திற்கு வைர விழா கண்டவனே...

படித்ததை பாதுகாக்க சொன்னவனே...
பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலனே...

புகழை விரும்பாதவனே...
பொறுமையே உன் பொறுமை கண்டு வியக்க நடப்பவனே...   

தோல்விக்கூட உரமூட்டும் என்றான்...
தோற்றவர்களை அரவணைக்க கற்று தந்தான்...

மானுடத்தை மதிக்கும் மாண்பு...
மாற்று அணியை எடுத்தெறிந்து பேசாத பண்பு...

இலாக்காவில் மட்டுமல்ல...
இயக்கத்திலும் என்னவோ உன்  பணி இயக்குனரே...   

எழுத்தில், பேச்சில் இளமையின் துள்ளல்...
நீதானே இயக்கத்தின் வள்ளல்...

இளைஞர்களின் இயக்க வழிகாட்டியே...
எங்கள் கேள்விகள், தேடல்கள், விடைகள் எல்லாமே நீயே...

அறுபது என்பது...
எண்ணிக்கை மட்டுமே...
பிரயமல்ல உனக்கு...

உன் நூருக்குக் காத்திருப்பேன்...
என்பது வயது இளைஞனாக...

இன்று 2016 மே 31...
பாசத்தலைவன்... பட்டாபிக்கு...
பணி ஓய்வா...
இல்லை...

அறுபது...
உன் தொடர் பணியால்... 
பண் நூறு காண
பல்லாண்டு... பல்லாண்டு...
பல நூறாண்டு வாழ்ந்திடத்
சேலம் மாவட்ட சங்கத்தின்...
நல் வாழ்த்துக்கள்...

2 comments:

  1. Nalla tamil vaazattum thanks balu

    ReplyDelete
  2. சரியாய்ச் சொன்னீர்கள்! அதையும் நிறைவாய்ச் சொன்னீர்கள்! வாழ்த்துக்கள் தோழரே!

    ReplyDelete