Wednesday, 11 May 2016

நன்றி...! நன்றி...!! நன்றி...!!!


7-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில் - தங்களது
தொழிற்சங்க ஜனநாயகக் கடமையை ஆற்றிட்ட...
தோழர் மற்றும் தோழியர்களுக்கு
உள்ளம் நிறைந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.

நமது NFTE இயக்கம் வெற்றி பெற...
உழைத்திட்ட...
TEPU மற்றும் SEWA சங்கத் தலைவர்கள், தோழர்களுக்கு
நெஞ்சு நிறை நன்றிகள்...

தேர்தலை நியாயமாகவும்... நேர்மையாகவும்...
சுமூகமாகவும்... நடத்தி முடித்த...
நிர்வாகத்திற்கு நமது நன்றி பாராட்டுக்கள்.

உடல்நிலை சரியில்லாத நிலையில்...
காலூன்ற முடியாமல்... 
தோழர்களின் தோள் மீது குழந்தையாய் தவழ்ந்து வந்து
வாக்களித்த... தோழர். இளங்கோவன்...

அரசு மருத்துவமனையில்...
தன் அறுவை சிகிச்சையை தள்ளி வைத்து விட்டு...
வாக்களிக்க சென்ற... தோழர். கிருஷ்ணன்...

தன் ஆறு மாத கைக்குழந்தையுடன்...
வந்து... வாக்களித்த... தோழியர். அன்பரசி

இருதய அறுவை சிகிச்சையின்... ரணம் ஆறாத நிலையில்...
தன் உடல்நிலை பற்றி கவலை கொள்ளாமல்...
வந்து... வாக்களித்த... தோழர்கள். சேகர் மற்றும் தியாகராஜன்...

தன் மூத்த மாமியார் இறந்த அதிர்ச்சியையும் தாங்கி
அமைதியாய் வாக்களித்து சென்ற... தோழர். சின்னசாமி...

மருத்துவமனையில்...
தன் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்த... மறு நிமிடமே...
வந்து... வாக்களித்த... தோழர். சுப்ரமணியன்...

இப்படி...
சிரமம் பாராது... பல முக்கிய குடும்ப நிகழ்வுகளுக்கு 
மத்தியில்... வாக்களிப்பதை மையமாகக் கொண்டு...
வாக்களித்த தோழர், தோழியர்களின் அற்புத செயல்கள்
நம் நெஞ்சை நிறைக்கிறது.

"M" அணி தவிர்த்து...
உங்களுக்கு தான் வாக்களித்தேன்...
என... ரகசிய குறி காட்டி சென்ற...
ரகசிய... வாக்காளர்களுக்கும்           
நமது நெஞ்சு நிறை நன்றிகள்...

எல்லாவற்றிற்கும்... மேலாக...
எந்நிலையிலும்... NFTE இயக்கம் சுமந்த வேர்களான...
ஐம்பதைக் கடந்தாலும்... அறுபதைக் கடந்தாலும்...
இளைய தோழன்... இட்ட கட்டளையை...
ஏற்று... பணியாற்றிய...
மாவட்ட சங்க நிர்வாகிகள்... கிளைச் செயலர்கள்...
மற்றும் முன்னணி தோழர்களுக்கு...
இயக்கத்தின் செந்நன்றிகள்...

No comments:

Post a Comment