Tuesday, 22 December 2015

நாமக்கல் நகர, ஊரக கிளைகளின் சிறப்புக்கூட்டம்...
மற்றும்... TMTCLU கிளைத் துவக்க விழா...






















மாவட்ட செயற்குழு முடிவின் அடிப்படையில் நாமக்கல் நகர
மற்றும் ஊரக கிளைகளின் இணைந்த சிறப்புக் கூட்டம் 
மற்றும் TMTCLU கிளைத் துவக்க விழா... 19-12-2015 
வெள்ளிக்கிழமை அன்று மாலை 5-00 மணிக்கு 
நாமக்கல் LMR-இல் நடைபெற்றது.

இந்த சிறப்புக்கூட்டத்திற்கு நகர கிளைத் துணைத்தலைவர் 
தோழர். M.சம்பத் மற்றும் ஊரக கிளைத் தலைவர் தோழர். C.தங்கராஜ்
ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கினர்.

நாமக்கல் ஊரக கிளைச் செயலர் தோழர். K.கணேசன் வரவேற்புரை
ஆற்ற... தோழியர். M.கலைச்செல்வி அஞ்சலி உரை ஆற்ற... 
மாவட்ட உதவி செயலர் தோழர். N.ஹரிகிருஷ்ணன் 
துவக்க உரை ஆற்றினார்.

TMTCLU மாவட்ட தலைவர் தோழர். N.சிவமோகன், TMTCLU மாவட்ட
உதவி செயலர் தோழர். P.செல்வம், TMTCLU மாவட்ட பொருளர்
தோழர். G.செல்வராஜ் மற்றும் TMTCLU மாவட்ட செயலர்
தோழர். A.கந்தசாமி ஆகியோர் கருத்துரை
வழங்கினர்.

நாமக்கல் நகர மற்றும் ஊரக கிளைத்தோழர்கள் தங்கள் பகுதி
பிரச்சனைகளை விவாதத்தின் போது எடுத்துரைத்தனர்.

மாவட்ட செயலர் தோழர். C. பாலகுமார், மாநில அமைப்பு செயலர்
தோழர். G. வெங்கட்ராமன் மற்றும் மாவட்ட தலைவர் தோழர்.
S.சின்னசாமி ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

சிறப்புக் கூட்டத்தின் ஒரு பகுதியாக... TMTCLU நாமக்கல் கிளை துவக்க
விழா மற்றும் கிளை மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாநாட்டின் முடிவில் கீழ்க்கண்ட தோழர்கள்... 
புதிய நிர்வாகிகளாக... ஏக மனதாக...  
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கிளைத் தலைவர்      : தோழர். M. செந்தில்குமார், CL , மோகனூர்.

கிளை து.தலைவர்    : தோழர். M. கோவிந்தராஜ், CL, சேந்தமங்கலம்.
                                            தோழர். R. நாவலடி, CL, A/C Plant, நாமக்கல்.
               
கிளைச் செயலர்         : தோழர். K. சரவணன், CL , நாமக்கல்.

கிளை உ. செயலர்      : தோழர். K.C. சக்திவேல், CL, நாமக்கல் ஊரகம். 
                                            தோழர். S. ராஜா, CL, IMPCS, நாமக்கல்.

கிளைப் பொருளர்      : தோழர். C. அரவிந்த், CL, நாமக்கல்.

இறுதியாக நாமக்கல் நகர கிளைச் செயலர் தோழர். V.மாதேஸ்வரன்
நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். இக்கூட்டத்தில்...
கிளைகளில் உள்ள அனைத்து தோழர், தோழியர்களும் 
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment