Wednesday, 2 September 2015

2015 செப்டம்பர் 2 - பொது வேலை நிறுத்த...
பரப்புரை பயணக்  கூட்டம் - 29-08-2015

d48ed900e79fa9547169c26138b4cd8d_L

நமது சேலம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்ட முடிவின்
அடிப்படையில் நகர மற்றும் ஊரக கிளைகளில் தலா இரண்டு நாட்கள்
பரப்புரை பயணம் மேற்கொள்வது என்பது முடிவு. அதன்படி 29-08-2015
அன்று ஊரக கிளைகளில் 2 -வது நாளாக பரப்புரை 
பயணம் நடைபெற்றது.

2-வது நாள் பரப்புரை பயணத்தில்... சங்ககிரி, எடப்பாடி, 
ஜலகண்டபுரம், வனவாசி, மேட்டூர் RS, மேட்டூர் டேம், ஓமலூர்
ஆகிய கிளைகளில் பரப்புரை மற்றும் வாயிற் 
கூட்டங்கள் நடைபெற்றது.

இந்த பரப்புரை பயணத்தில்... NFTE சார்பாக... மாவட்ட செயலர்
தோழர். C. பாலகுமார், மாநில அமைப்பு செயலர்
தோழர். G. வெங்கட்ராமன், BSNLEU சார்பாக... மாவட்ட செயலர்
தோழர். E. கோபால், மாவட்ட அமைப்பு செயலர்
தோழர். M. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

அனைத்து கிளைகளிலும் அந்தந்த பகுதியை சேர்ந்த NFTE மற்றும்
BSNLEU சங்க மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் மற்றும்
முன்னணி தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.






No comments:

Post a Comment