சென்னை கூட்டுறவு சங்க செய்திகள்...

03-01-2015 அன்று சென்னை தொலை தொடர்பு கூட்டுறவு சங்கத்தின்
90வது பேரவைக் (RGB) கூட்டம் நடைபெற்றது. அதில் கீழ்கண்ட
முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது...
1) Thrift Fund ரூபாய் 500/- லிருந்து ரூபாய் 800/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வழங்கப்பட்டு வந்த வட்டிவிகிதம் 8% லிருந்து 9% மாக உயர்த்தப் பட்டுள்ளது.
2) குடும்ப நல நிதி (FWS) ரூபாய் 800/- லிருந்து ரூபாய் 1200/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களது குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீட்டு தொகை ரூபாய் 4 லட்சத்திலிருந்து ரூபாய் 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
3) நகை கடன் அனைத்து கிளைகளிலும் வழங்கப்படும்.
நகை மதிப்பீட்டாளர் கட்டணம் ரத்து செய்யப்படும். மேலும் நகை
கடன் வசதி ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும்.
4) சாதாரண கடன் (OL) ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
5) நமது கூட்டுறவு சங்கத்தில் RD திட்டம் அமுல் படுத்தப்படுகிறது. RD க்கான கால அளவு 12, 24, 36, 48 மற்றும் 60 மாதங்கள் என்ற அடிப்படையில் 10% வட்டி வழங்கப்படும்.
6) சாதாரண கடன் 3 மாதத்திற்கு ஒரு முறை என்று இருப்பதை மாதா மாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
7) 2013-14 க்கான டிவிடெண்ட் தொகை 12% இந்த மாதத்திலேயே (ஜனவரி 2015ல்) வழங்கப்படும்.
8) கம்ப்யூட்டர் கடன் ரூபாய் 30,000/- இந்த மாதம் (05-01-2015) முதல்
வழங்கப்படும்.
9) RGB க்களுக்கான அமர்வு தொகை ரூ.500/- லிருந்து ரூ. 1000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
10) RGB க்களுக்கான தினப்படி ரூ. 300/- லிருந்து ரூ. 500/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் கடன் மற்றும் டிவிடெண்ட் தவிர மற்ற முடிவுகள் முறைபடி டெல்லி மத்திய பதிவாளர் ஒப்புதல் பெற்று மார்ச் (அ) ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வரும்.
தகவல்:
தோழர். G. வெங்கட்ராமன்,
RGB உறுப்பினர், சென்னை சொசைட்டி.
செல்: 94432-34757 & 75987-71131.
No comments:
Post a Comment