Tuesday, 13 January 2015

இயக்கப் பற்றுடன் நடைபெற்ற...

இளம்பிள்ளை கிளை மாநாடு...



 
















இளம்பிள்ளை கிளையின் 5 வது கிளை மாநாடு இளம்பிள்ளை
தொலைபேசி நிலையத்தில் 05-01-2015 திங்கட்கிழமை அன்று
நடைபெற்றது. மாநாட்டிற்கு கிளைத் தலைவர் தோழர். 
V. ஈஸ்வரன் தலைமை தாங்கினார்.

மாவட்ட உதவி செயலர் தோழர். R. மணி, தேசியக் கொடியையும்,
இளம்பிள்ளை கிளை உறுப்பினர் தோழியர். S. தமிழ்செல்வி 
நமது சம்மேளன கொடியையும் ஏற்றி சிறப்பித்தனர்.

 கிளை செயலர் தோழர். A. கந்தசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். தோழர். R. ரவி, கிளை உதவி செயலர்
அவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

மாவட்ட துணைத் தலைவர் தோழர். G. வெங்கட்ராமன் மாநாட்டை
துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.

மாவட்ட தலைவர் தோழர். S. சின்னசாமி, மாவட்ட உதவி செயலர்
தோழர்கள். P. கஜேந்திரன் மற்றும் R.மணி, செவ்வை (EXTL) கிளை
செயலர் தோழர். A . கருணாகரன், கொண்டலாம்பட்டி
கிளை செயலர் தோழர். S. கண்ணையன், சங்ககிரி கிளைத் தலைவர்
தோழர். N. மாதையன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.

நமது தொழிற்சங்க தலைவர் தோழர். M.S, மற்றும் மாநில துணைத்
தலைவர் தோழர். P. ராஜா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் சிறப்புரை வழங்கினார்.

ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கீழ்க் கண்ட தோழர்கள் தலைவர், செயலர், பொருளராக கொண்ட...
பட்டியல் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன்படி...

தலைவர். தோழர். V. ஈஸ்வரன், TM 
செயலர். தோழர். A. கந்தசாமி, TM   
பொருளர். தோழர். S. தமிழ்செல்வி, TM   

இறுதியாக கிளை துணைத் தலைவர் தோழர். D. மாணிக்கம்
நன்றி கூற மாநாடு நிறைவு பெற்றது.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது... அவர்களின் பணி சிறக்க தோழமை வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment