Wednesday, 31 July 2019
Friday, 28 June 2019
Monday, 17 June 2019
NFTE - BSNL மற்றும் TMTCLU இணைந்த
பெருந்திரள் தர்ணா போராட்டம்
அருமைத் தோழர்களே...! நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு., மாதா மாதம் சம்பளம் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. நாமும்., நிர்வாகத்தை சந்திப்பது., கோரிக்கையை வலியுறுத்துவது பின்னர் காலதாமதமாக சம்பளம் வழங்குவது என்பது தொடர் கதை., ஆகிவிட்டது.
இந்த அவல நிலையை கண்டித்தும்., 2019 மே., 2019 ஏப்ரல் முதல் மற்றும் 2019 பிப்ரவரி முதல் ஒரு., இரு மற்றும் நான்கு மாதங்களாக (பாதுகாப்பு பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கு: 2019 மே மாதம் மட்டும்., கேபிள் பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கு: 2019 ஏப்ரல் மற்றும் மே 2 மாதம்., துப்புரவு பகுதி (House Keeping) ஒப்பந்த ஊழியர்களுக்கு: 2019 பிப்ரவரி முதல் மே வரை 4 மாதம்) ஊதியம் வழங்கப்படாததை கண்டித்தும்., பெரும் கோபக் கனல் கொண்டு., போராட்ட களம் காண்பது என்று., NFTE - BSNL மற்றும் TMTCLU ஆகிய இரண்டு மாவட்டச் சங்கங்களும் இணைந்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில்...!
NFTE மற்றும் TMTCLU இணைந்த பெருந்திரள் தர்ணா போராட்டம் 19-06-2019 புதன்கிழமை காலை 10-00 மணிக்கு., முதன்மை பொது மேலாளர் அலுவலகம் (PGM Office., Salem)., சேலம்-7 முன்பாக நடைபெறும்.
எனவே தோழர்களே...!
நாளை (19-06-2019) நடைபெறும் இந்த தர்ணா போராட்டத்தில் NFTE மற்றும் TMTCLU ஆகிய சங்கங்களை சார்ந்த தோழர்., தோழியர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்க தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஒப்பந்த ஊழியர்களுக்கு...! ஒவ்வொரு மாதமும்...!
கால தாமதமின்றி...! ஊதியம் பெற்றிட...! போராடுவோம்...!
திரள்வீர்......! தோழர்களே......!
தோழமையுடன்...!
NFTE - BSNL & TMTCLU, மாவட்டச் சங்கங்கள்.,
சேலம் தொலைத்தொடர்பு மாவட்டம்.
Tuesday, 30 April 2019
மே தினத்தில்...! சூளுரைப்போம்...!
உலகத்தொழிலாளர்களே...! ஒன்றுபடுங்கள்...!
என்ற முழக்கத்தோடு...!
செங்கொடியே...!
நம் தொழிலாளர்களை காக்கும்...!
என குரல் எழுப்பி...!
மே தினத்தில்...! சூளுரைப்போம்...!
போராடு...!
செங்கொடி...! ஏந்தி...!
போராடு......!
புரட்சிகர மே தின நல்வாழ்த்துகளுடன்...!
தோழமையுள்ள...!
ச.பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் SSA.
Thursday, 11 April 2019
விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்து
நாடு தழுவிய - ஆர்ப்பாட்டம்
BSNL புத்தாக்கம் என்ற பெயரில் BSNL நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பும் விதமாக., விருப்ப ஓய்வு திட்டத்தை (VRS - Voluntary Retirement Scheme) அமுலாக்க தொலைத் தொடர்பு துறை (DOT)-ம்., BSNL நிர்வாகமும் அவசர., அவசரமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில்., மத்திய அரசு., DOT மற்றும் BSNL நிர்வாகத்தின் ஊழியர் விரோத விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்து 12-04-2019 அன்று நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட NFTE., BSNLEU., AIBSNLEA., BSNLMS., ATM., TEPU., BSNLOA ஆகிய சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.
இந்த போராட்ட அறைகூவலைத் தொடர்ந்து...
நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் NFTE., BSNLEU., AIBSNLEA., TEPU., TMTCLU., TNTCWU ஆகிய மாவட்ட சங்கங்களின் சார்பாக., அனைத்து ஊரக கிளைகளில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தோழமையுடன் வேண்டுகிறோம்.
நகர கிளைகளின் சார்பாக...
12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 05-30 மணிக்கு சேலம் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக NFTE., BSNLEU., AIBSNLEA., TEPU., TMTCLU., TNTCWU ஆகிய மாவட்ட சங்கங்களின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
எனவே தோழர்களே...
அணி திரள்வோம்... ஆர்ப்பரிப்போம்...
ஊழியர்களின் விருப்பம் இல்லா...
விருப்ப ஓய்வு திட்டத்தை முறியடிப்போம்...
தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.
Subscribe to:
Posts (Atom)