Monday 17 June 2019

NFTE - BSNL மற்றும் TMTCLU இணைந்த
பெருந்திரள் தர்ணா போராட்டம்


அருமைத் தோழர்களே...! நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு., மாதா மாதம் சம்பளம் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. நாமும்., நிர்வாகத்தை சந்திப்பது., கோரிக்கையை வலியுறுத்துவது பின்னர் காலதாமதமாக சம்பளம் வழங்குவது என்பது தொடர் கதை., ஆகிவிட்டது.

இந்த அவல நிலையை கண்டித்தும்., 2019 மே., 2019 ஏப்ரல் முதல் மற்றும் 2019 பிப்ரவரி முதல் ஒரு., இரு மற்றும் நான்கு மாதங்களாக (பாதுகாப்பு பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கு: 2019 மே மாதம் மட்டும்., கேபிள் பகுதி ஒப்பந்த ஊழியர்களுக்கு: 2019 ஏப்ரல் மற்றும் மே 2 மாதம்., துப்புரவு பகுதி (House Keeping) ஒப்பந்த ஊழியர்களுக்கு: 2019 பிப்ரவரி முதல் மே வரை 4 மாதம்) ஊதியம் வழங்கப்படாததை கண்டித்தும்., பெரும் கோபக் கனல் கொண்டு., போராட்ட களம் காண்பது என்று., NFTE - BSNL மற்றும் TMTCLU ஆகிய இரண்டு மாவட்டச் சங்கங்களும் இணைந்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில்...!

NFTE மற்றும் TMTCLU இணைந்த பெருந்திரள் தர்ணா போராட்டம் 19-06-2019 புதன்கிழமை காலை 10-00 மணிக்கு., முதன்மை பொது மேலாளர் அலுவலகம் (PGM Office., Salem)., சேலம்-7 முன்பாக நடைபெறும்.

எனவே தோழர்களே...!
நாளை (19-06-2019) நடைபெறும் இந்த தர்ணா போராட்டத்தில் NFTE மற்றும் TMTCLU ஆகிய சங்கங்களை சார்ந்த தோழர்., தோழியர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்க தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு...! ஒவ்வொரு மாதமும்...!
கால தாமதமின்றி...! ஊதியம் பெற்றிட...! போராடுவோம்...!
திரள்வீர்......! தோழர்களே......!

தோழமையுடன்...!
NFTE - BSNL & TMTCLU, மாவட்டச் சங்கங்கள்.,
சேலம் தொலைத்தொடர்பு மாவட்டம்.
   

No comments:

Post a Comment