விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்து
நாடு தழுவிய - ஆர்ப்பாட்டம்
BSNL புத்தாக்கம் என்ற பெயரில் BSNL நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பும் விதமாக., விருப்ப ஓய்வு திட்டத்தை (VRS - Voluntary Retirement Scheme) அமுலாக்க தொலைத் தொடர்பு துறை (DOT)-ம்., BSNL நிர்வாகமும் அவசர., அவசரமாக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில்., மத்திய அரசு., DOT மற்றும் BSNL நிர்வாகத்தின் ஊழியர் விரோத விருப்ப ஓய்வு திட்டத்தை எதிர்த்து 12-04-2019 அன்று நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட NFTE., BSNLEU., AIBSNLEA., BSNLMS., ATM., TEPU., BSNLOA ஆகிய சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.
இந்த போராட்ட அறைகூவலைத் தொடர்ந்து...
நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் NFTE., BSNLEU., AIBSNLEA., TEPU., TMTCLU., TNTCWU ஆகிய மாவட்ட சங்கங்களின் சார்பாக., அனைத்து ஊரக கிளைகளில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட தோழமையுடன் வேண்டுகிறோம்.
நகர கிளைகளின் சார்பாக...
12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 05-30 மணிக்கு சேலம் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக NFTE., BSNLEU., AIBSNLEA., TEPU., TMTCLU., TNTCWU ஆகிய மாவட்ட சங்கங்களின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
எனவே தோழர்களே...
அணி திரள்வோம்... ஆர்ப்பரிப்போம்...
ஊழியர்களின் விருப்பம் இல்லா...
விருப்ப ஓய்வு திட்டத்தை முறியடிப்போம்...
தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.
No comments:
Post a Comment