Sunday, 10 February 2019

BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை பெற்றிட...
BSNL நிறுவனம் காத்திட... தேசம் காத்திட...
தெருமுனை பரப்புரை இயக்கம்...



நமது அகில இந்திய., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு., 3-வது ஊதிய மாற்றம்., ஓய்வூதிய மாற்றம்., ஓய்வூதிய பங்கீடு., 4G அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி., அகில இந்திய அளவில் 11-02-2019 முதல் 15-02-2019 வரை 5 நாட்கள் தொடர்ந்து., மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கம் நடத்திட அறைகூவல் விடுத்திருந்தது.

இந்த அறைகூவலைத் தொடர்ந்து., நமது சேலம் தொலைத் தொடர்பு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கத்தை., வெற்றிகரமாக்கிட., நமது சேலம் மாவட்ட BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (NFTE - TEPU - TMTCLU) சார்பாக., சேலம் மாவட்ட நகர பகுதிகளில் 8 மையங்களில் மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல்., அனைத்து ஊரக கிளைகளிலும்., 11-02-2019 முதல் 15-02-2019 வரை 5 நாட்கள் தொடர்ந்து மக்கள் சந்திப்பு மற்றும் தெருமுனை பரப்புரை இயக்கம் நடத்திட வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மக்கள் சொத்தாம்...! BSNL நிறுவனம் காக்கும்...!
BSNL நிறுவன ஊழியர்களின்......! உரிமை காக்கும்......!
செல் கோபுரம் காக்கும்...! தேசம் காக்கும்...! இந்த புனிதப்...!
போரில்...! பொதுமக்களும்...! ஊழியர்களும்...!
இணைந்து...! போராடுவோம்...!
ஆதரவு......! தாரீர்......!

என்றும் மக்கள் சேவையில்...!
வாழ்த்துக்களுடன்...! தோழமையுள்ள...!
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - AUAB.,
சேலம் - SSA.

No comments:

Post a Comment