தமிழ் மாநில AUAB தலைவர்கள் CGM
உடன் சந்திப்பு - ஓர் பார்வை

நமது தமிழ் மாநில AUAB கூட்டமைப்பின் தலைவர்கள்., தமிழகத்தில் 4G சேவை துவக்கம் மற்றும் அதன் செயல்பாடு., சிம் பற்றாக்குறை உள்ளிட்ட ஒரு சில பிரச்சனைகள் குறித்து விவாதித்திட 31-01-2019 வியாழக்கிழமை அன்று நமது CGM (தமிழ் மாநில தலைமை பொது மேலாளர்) அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப் பேச்சுவார்த்தையில்., தமிழகத்தில் 4G சேவை 2100MHz (மெகா ஹெர்ட்ஸ்) அலைக்கற்றை மூலம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 4G சேவை துவக்கத்தின் முதல் கட்டமாக பரிசோதனை அடிப்படையில் கோவை தொலைத்தொடர்பு மாவட்டத்தில் 5 BTS-களில் 4G சேவை வழங்கப்பட்டு குறைபாடுகளை அறிந்து சரி செய்த பின்னர்., கோவை மற்றும் சேலம் தொலைத்தொடர்பு மாவட்டங்களில் முழு வீச்சாக அமுல்படுத்தப்படும். இச் சேவை., கோவை (செல் இணைப்பு: 240000) மற்றும் சேலம் (செல் இணைப்பு: 140000) தொலைத்தொடர்பு மாவட்டங்களில் உள்ள 3G BTS-களில் அமுல்படுத்தப்படும். இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 3G சேவை கிடைக்காது. அதற்கு பதிலாக 4G மற்றும் 2G சேவை மட்டுமே இந்த பகுதிகளில் கிடைக்கும். 4G சேவை பயன்படுத்துவதற்கான செல் கைபேசி (Cell Phone)., நமது LTE Band - I (Long Term Evolution - நீண்ட கால பரிணாமம்) சேவை பெறும் வகையில் (அல்லது) ஏற்றுக் கொள்ள கூடிய வகையில் இருந்திடல் வேண்டும். இந்த சேவையை ஏற்றுக் கொள்ளக்கூடிய 73 செல் கைபேசி மாதிரிகள் (Cell Phone Model) அடையாளம் காணப்பட்டுள்ளன. தாங்கள் பயன்படுத்தும் செல் கைபேசி (Cell Phone) 4G சேவை பெற தகுதி உள்ளதா...? என்பதை அறிந்து கொள்ள விரைவில் SMS (குறுந்தகவல்) சேவை துவக்கப்படும். இந்த 4G சேவையில் 13 Mbps வேகம் குறையாமல் Data சேவை கிடைக்கும். மேலும்., வேகத்தை உயர்த்திட OFC Back HAUL மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்., அனைத்து மாவட்டங்களுக்கும் சிம் அட்டை (Sim Card) தட்டுபாடுன்றி வழங்க வலியுறுத்தப்பட்டது. தற்பொழுது 3.5 லட்சம் சிம் அட்டை (Sim Card) கைவசம் உள்ளது. மேலும்., தேவையான சிம் அட்டை (Sim Card) ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 4G மாற்றம் செய்யப்படும் பகுதிகளில்., BSNL வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் முகவரி சரிபார்க்கப்பட்டு இலவசமாக சிம் அட்டை (Sim Card) வழங்கப்படும். அடுத்த கட்டமாக வேலூர்., மதுரை., திருச்சி மற்றும் நாகர்கோயில் தொலைத் தொடர்பு மாவட்டங்களில் 4G சேவைக்கான விரிவாக்கப் பணிகள் நடைபெறும் என்று நமது தலைமை பொது மேலாளர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வருவாய் மிக குறைவாக., செலவு மிக அதிகமாக உள்ள பகுதிகள் (தொலைபேசி நிலையங்கள் மற்றும் செல் கோபுரங்கள்)., மற்ற பகுதிகளோடு இணைக்கப்பட்டு., படிப்படியாக மூடப்பட்டு அனைத்து மாவட்டங்களும் லாபம் ஈட்டும் பகுதியாக மாற்றிட திட்டமிடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் BSNL-ன் அனைத்து சேவைகளிலும் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை கொண்டுள்ளது.
நமது தமிழ் மாநிலம் சேவை முன்னேற்றத்தில்., மேலும் முன்னேற அனைவரும் ஒத்துழைத்து செயல்பட வேண்டுகோள் விடப்பட்டது. AUAB கூட்டமைப்பின் தலைவர்களும் தங்களின் ஒத்துழைப்பை நல்கிட உறுதி கூறினர்.

தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.
No comments:
Post a Comment