Wednesday, 8 March 2017

ஒப்பந்த ஊழியர்களுக்கு... ஊதிய உயர்வு...


2016 செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தத்தை தொடர்ந்து, 
மத்திய தொழிலாளர் அமைச்சகம் புதிய குறைந்தபட்ச ஊதியம் பற்றிய,
அறிவிப்பை 01-09-2016 அன்று வெளியிட்டது. அந்த அறிவிப்பினை
தொடர்ந்து 19-01-2017 அன்று அறிவிப்பு, அரசிதழாக
(Gazette Notification) வெளியிடப்பட்டது.

இந்த ஊதிய உயர்வை நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும்...
ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட..., நமது NFTE மற்றும்
TMTCLU மாநில..., சங்கங்கள்... தொடர்ந்து...
வலியுறுத்தியத்தின் விளைவாக...

தற்போது... கார்ப்பரேட் அலுவலகத்தின் வழிகாட்டுதல்...
பெற்று, மாநில நிர்வாகம் 07-03-2017 அன்று அனைத்து மாவட்டங்களுக்கும்
ஊதிய உயர்விற்கான..., மத்திய அரசின்... அரசிதழை...
அமுல்படுத்தும்படி வழிகாட்டும் உத்திரவினை,
வெளியிட்டுள்ளது.

இந்த உத்திரவின்படி...

UNSKILLED LABOUR:
A பிரிவு நகரம் தினக்கூலி: ரூ. 523/-
B பிரிவு நகரம் தினக்கூலி: ரூ. 437/-
C பிரிவு நகரம் தினக்கூலி: ரூ. 350/-

புதிய உத்திரவின் மூலமாக ஒவ்வொரு ஒப்பந்த 
ஊழியர்களுக்கும் நாள் ஒன்றுக்கு C பிரிவு நகரமாக இருந்தால் 
ரூ.100/- மற்றும் B பிரிவு நகரமாக இருந்தால் ரூ. 125/- 
ஊதிய உயர்வு கிடைக்கும்.

இந்த ஊதிய உயர்வு... அரசிதழ் வெளியிடப்பட்ட...
19-01-2017 முதல் அமுல்படுத்தப்படும்.

இந்த ஊதிய உயர்வு ஒரு நல்ல முன்னேற்றமாக இருந்தாலும்,
நமது கோரிக்கையான... ரூ. 18,000/- என்பதை ஒப்பிடும் போது... நாம்...
செல்ல.. வேண்டிய தூரம் வெகு தொலைவில் உள்ளது.

தொடர்ந்து போராடுவோம்... இருப்பினும்... இன்று...
இப்பலன்... கிடைத்திட செய்த..., நமது NFTE மற்றும் TMTCLU 
மாநில சங்கங்களுக்கு நமது நன்றி பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment