Tuesday, 24 January 2017

ஜனவரி 24 - தேசிய பெண் குழந்தைகள் தினம்...


தேசிய பெண் குழந்தைகள் தினத்தில்...!
மனதை தொட்ட...!! ஒரு பெண் குழந்தையின் கவிதை...!!!

ஆட்டுப்பால் கொடுத்தாய்
மாட்டுப்பால் கொடுத்தாய்
தாய்பால் கொடுக்க
தாய் நீ மறந்தாலும்
கள்ளிப்பால் ஏன் கொடுத்தாய்
கள்ளியே என்னைக் கொல்ல...!

கள்ளிப்பால் காலம் தாண்டி
கணினி யுகம் வந்தேன்
கருவிலே கண்டறிந்து
கல்லறையாய் முடிந்தது
கருவறைப் பயணங்கள்...!

கருவிலே கலைத்தனர் பலர்
தெருவிலே தொலைத்தனர் சிலர்
பஞ்சத்தில் தப்பி பிழைத்து
நெஞ்சத்தில் துணிவு கொண்டேன்
வஞ்சத்தில் வலைவிரித்தனர்
அஞ்சி நான் ஓடினாலும்
மஞ்சத்தில் வீழ்த்தினர்
மானமதை பறித்தனர்...!

தனித்து நான் செல்கையிலே
தாகம் தீர்க்க முயன்றனர்
துணிந்து எதிர் நின்றேன்
திராவகம் தெளித்தனர்...!

கருச் சிதைவில் தப்பினேன்
கள்ளிப்பாலில் தப்பினேன்
காமுகனிடம் தப்பினேன்
கடும் திராவகத்தில் தப்பினேன்
கொடும் சொல்லில் தப்பினேன்...!

எதிரியிடம் தப்பி விட்டேன்
துரோகியிடம் வீழ்ந்து விட்டேன்
கண்ணே கண்ணைக் குத்துவதாய்
பெண்ணே என்னை அழிக்கக் கண்டேன்
நீரடித்து நீர் விலகாதாம்
நீ அடித்து நான் வீழ்ந்தேன்...!

வரமாய் நான் கிடைத்தும்
வரனிற்கு விலை போனேன்
தாரமாய் என்னை விற்க
தட்சணையும் தந்தேன்...!

தாயாய் நான் வேண்டும்
தாரமாய் நான் வேண்டும்
தங்கையாய், தோழியாய்
தமக்கையாய், தன்மகளாய்
பார்க்க ஏன் மறுக்கிறாய்

தட்டுத் தடுமாறி வாழ்வில்
நித்தம் போராடி உலகில்
தத்தம் துறையினிலே இன்று
சாதிக்க துவங்கி விட்டேன்
விடியலை நோக்கி விரைகின்றேன்
வாழ்த்த வேண்டாம்
வதைத்து விடாதே...!

பெண்களை உயர்வாக மதித்து நடத்தும் நாடு தான் 
முன்னேறும் என்றார் காந்தியடிகள்... பெண் அடிமை தீரும் மட்டும்
நம் நாட்டின் பெருமை உயராது என்றார் பாரதிதாசன்...
&
எனவே... நம் நாடு முன்னேற...! நாட்டின் பெருமை உயர...!
தேசிய பெண் குழந்தைகள் தினத்தில்...! பெண் குழந்தைகளின்...!
பெருமையை பேணிக் காப்போம்...!
&
அனைவருக்கும்...! NFTE - BSNL சேலம் மாவட்ட சங்கத்தின்...!
தேசிய பெண் குழைந்தைகள் தின நல் வாழ்த்துக்கள்...!!!

No comments:

Post a Comment