Saturday, 31 December 2016

2017-இன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...



பூத்தது..., 2017..., புது வருடம்...!
பூத்து குலுங்கட்டும்... புது வசந்தம்...!!

கடந்தது மீண்டும் திரும்பாது தோழா...!
நடந்ததையென்னி... வீண் கவலையெதற்கு...!!

கடந்ததைக் கற்றலாய் கருதி நீ...!
கடக்கப் போகும் பாதையை கவனி...!!

பாதை முறையானால் பயணங்கள் முழுமையடையும்...!
பகல்கனவு மறந்து உழைக்கத் தொடங்கு...!!

வெற்றி துயில் கொள்ளும் உன் மடியில்...!
துக்கங்கள் தூள்தூளாகட்டும் துளியும் மிச்சமின்றி...!!

வழியைத் தேடி வாழ்க்கையைத் தொலைக்காதே...!
உன்னால் உருவாக்க முடியும் உனக்கானதை...!!

பின் தொடரட்டும்...
உலகம் உன் வழியை...!

மாற்றங்கள் மலர்வது இயற்கையின் இயல்பு...!
மலரும் மாற்றங்கள் நல்லவையாகட்டும்...!!

எட்டிச் செல்லட்டும் ஏக்கங்களும் ஏமாற்றங்களும்...!
இனிய மாற்றங்கள் தரட்டும் இப்புத்தாண்டு...!!

அனைவருக்கும் NFTE-BSNL சேலம் மாவட்ட சங்கத்தின்...
  இனிய புத்தாண்டு... நல் வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment