Thursday, 24 November 2016

திருச்சி கருத்தரங்கம்... விரயமல்ல... வீரியம்...











ஊதியக் குழு அமைக்கப்பெற்ற அதிகாரிகள்... அமைதிக் காக்க...,
கடந்த கால விபரீதம் அறிந்து..,
வலி உணர்ந்து கொண்டிருக்கிற..., ஊழியர்களுக்கான...,
ஊதியக்குழு திட்டமிடல்..., கருத்தரங்கம்..., பாராட்டிற்குரியது...

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சங்கங்களையும்...,
ஊதியக்குழு கருத்தரங்குக்கு திட்டமிட தூண்டும்...,
செறிவு மிக்க கருத்தரங்கு...,
இருக்கையில் அமர முடியாமல்..., இடம் தேடி அலைந்த தோழர்கள்...,
ஆம்..., அரங்கு நிறைந்த தோழர்கள்...,
எதிர் பார்த்தது 200..., எதிர்பார்ப்புடன் வந்தது 700...,     

ஊதியக்குழு குறித்து..., வரவேற்றிருந்த தோழர்களின் அனுபவ உரை...
தோழர். பட்டாபியின்..., "சொல்லேர் உழவர்" எனும்...,
ஏர்முனை உரை...
பொதுச்செயலர் தோழர். சிங்கின்..., நடைமுறை உரை...,

ஊதியக்குழு..., ஊழியர்களுக்கானது...,
அதனை திறம்பட..., பெற..., திட்டமிடல் கருத்தரங்கம்...,
காலத்தே அவசியமானது..., என...,
"நிறைந்து சொல்லுதல் வல்லார்" என்பதாய்...,
வந்து சிறப்பித்த தோழர்..., தோழியர்..., உணர்த்தினர்...!

எல்லா புகழும்..., 
திருச்சி மாவட்ட செயலர்..., தோழர். பழனியப்பனுக்கே...,
மற்றும் திருச்சி தோழர்களுக்கே...,
உங்கள் உழைப்பும்..., உங்கள் முயற்சியும்...,
உங்கள் ஊர் கருத்தரங்கமும்..., நன்றே...,
என... உரக்க சொல்லும்...,
புதிய ஊதியம் பெறும் நன்நாளில்..., 
தமிழகம் மட்டுமல்ல..., இந்தியாவும் சேர்ந்து சொல்லும்...!

சேலம் மாவட்ட சங்கத்தின்..., சிந்தனையும் இதுவே...,
- நன்றி..., குடந்தை வலைத்தளம்...!

No comments:

Post a Comment