செய்தி... துளிகள்...
- 01-10-2016 முதல் உயர்ந்துள்ள 5.5% சதவீத IDA உயர்விற்கான DPE உத்திரவு 04-10-2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
- 24-09-2016 அன்று நடைபெற்ற JTO இலாக்கா போட்டித் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட நமது மத்திய சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
- மணமுறிவு (DIVORCE) பெற்று, பெற்றோர்களை நம்பி வாழும் பெண் பிள்ளைகளை BSNL MRS மருத்துவத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என கார்ப்பரேட் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
- 2014 - 2015 ஆம் ஆண்டிற்கான, போனஸ் ஒப்புதல்..., REMUNERATION COMMITTEE எனப்படும் BSNL வாரிய ஊதியக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் உத்திரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- BSNL ஊழியர்களுக்கு மாதம் ரூ.200/-க்கு அலைபேசியில் இலவசமாக பேசும் வசதி தரப்பட்டிருந்தது. இதில் ரூ.50/-க்கு..., தனியார் தொலைபேசிக்கு பேசுவதற்கு வசதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வசதி செப்டம்பர் மாதத்திற்குப் பின் தரப்படவில்லை, மேற்கண்ட வசதியை ஊழியர்களுக்கு அளித்ததின் மூலம் BSNL பழுது நீக்கும் சேவை FRS மேம்பட்டுள்ளதா...? என கார்ப்பரேட் அலுவலகம் மாநில நிர்வாகங்களைக் கேட்டுள்ளது. அனைத்து மாநிலங்களில் இருந்து பதில் கிடைத்த பின்பு மேற்கண்ட வசதியை தொடருவது பற்றி முடிவெடுக்கப்படும்.
- JAO தேர்வில் தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு உடனடியாக பயிற்சி வகுப்பு துவக்குவதற்கு ஹைதராபாத்தில் உள்ள NATFM (National Academy of Telecom Finance And Management) பயிற்சி மையத்திற்கு கார்ப்பரேட் அலுவலகம் உத்திரவிட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் தற்காலிகப் பதவி உயர்வு அளிப்பதற்கு விருப்பங்கள் கேட்கப்பட்டுள்ளன. 03-11-2016-க்குள் பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட்டால் தற்காலிகப் பதவி உயர்வு நடைமுறைக்கு வராது என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment