78.2 உத்திரவு...

ஓய்வூதியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான...
78.2 சத இணைப்பிற்கான உத்திரவு 18-07-2016 அன்று
DOT யால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உத்திரவின் படி...
- 10-06-2013 க்கு முன்பாக ஓய்வு பெற்ற தோழர்களின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் 01-01-2007 முதல் திருத்தி அமைக்கப்படும்.
- 10-06-2013 முதல் நிலுவை வழங்கப்படும்.
- முழு ஓய்வூதியம் (INCLUDING COMMUTATION) மற்றும் குடும்ப ஓய்வூதியத்துடன் 78.2 சத IDA இணைப்பு சேர்க்கப்படும். அதில் 30 சதம் கூடுதல் ஓய்வூதியமாக சேர்க்கப்பட்டு நிர்ணயம் செய்யப்படும்.
- பணிக்கொடை, விடுப்பு சம்பளம் மற்றும் தொகுப்பு ஓய்வூதியம் (COMMUTATION) ஆகியவற்றில் மாற்றமில்லை.
- BSNL நிர்வாக அலுவலகங்கள் உரிய கணக்கீடு செய்து DOT CELL க்கு அனுப்பிட வேண்டும்.
- மேற்கண்ட ஓய்வூதியத் திருத்தம் 31-12-2016 க்குள் முடிக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment