Tuesday 25 December 2018

இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்


சர்ப்பம் தந்த பாவத்தை
கர்ப்பம் வந்து
தீர்த்த நாள்.

மரத்தால் விளைந்த பாவத்தை
வரத்தால் களைந்த
மந்திர நாள்.

வார்த்தை ஒன்று
மனிதனாய் வடிவெடுத்த
நல்ல நாள்.

தொழுவம் ஒன்று
தொழுகை பெற்ற
திருநாள்.

ஒதுக்கப்பட்டவை
வணக்கம் பெறும் என
வருகையால் சொன்ன நாள்.

ஆடிடைக் கூட்டில்
ஆதவன் உதித்த
அதிசய நாள்.

இனிய.,
கிறிஸ்து பிறப்பு 
பெருநாள்.

அனைவருக்கும்., NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்
இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment