இயற்கை மிரட்ட...! இயக்கத்தின் வலிமை
உணர்த்திய...! சேலம்., வேலை நிறுத்த
விளக்கக் கூட்டம்......!

நமது தமிழ் மாநில., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL) முடிவின் படி., 2018 டிசம்பர் 3 முதல் நடைபெற இருக்கும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தின்., கோரிக்கை விளக்கக் கூட்டம் 29-11-2018 வியாழக்கிழமை அன்று மாலை 04-30 மணிக்கு., சேலம்., மெய்யனூர் தொலைபேசி நிலையத்தில்., சேலம் மாவட்ட., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு (NFTE - TEPU) சார்பாக., மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த வேலை நிறுத்த., கோரிக்கை விளக்கக் கூட்டத்திற்கு., TEPU மாவட்டச் செயலர் தோழர். P.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். NFTE மாவட்டச் செயலர் தோழர். C.பாலகுமார் தனது வரவேற்புரையோடு., கோரிக்கைகளை விளக்கி கருத்துரை ஆற்றினார்.
நமது காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளித்து., TNPL (தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை) நிறுவனத்தின்., LPF (தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை) தலைவர் தோழர். E.சண்முகம் வாழ்த்துரை வழங்கினார்.
NFTE மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார்.
கோரிக்கைகளை விளக்கி., NFTE சம்மேளனச் செயலர் தோழர். P.காமராஜ்., TEPU அகில இந்திய பொருளர் தோழர். மா.கண்ணதாசன் மற்றும் NFTE அகில இந்திய சிறப்பு அழைப்பாளர் தோழர். A.செம்மல் அமுதம் ஆகியோர் கோரிக்கை சிறப்புரை ஆற்றினர்.
இறுதியாக., NFTE மாவட்டப் பொருளர் தோழர். S.காமராஜ் நன்றி கூறி., வேலை நிறுத்த விளக்க கூட்டத்தை முடித்து வைத்தார்.
நமது ஊழியர்களின் பணி ஓய்வு காரணமாக., அலுவலக நாட்களில்., அரங்கில் அல்லது அறைகளில்., வாகன நிறுத்தங்களில்., அலுவலக நேரத்தில் கூட்டம் நடத்திட அஞ்சுகின்ற சூழ்நிலையில்., இயற்கை நம்மை மிரட்டிய நாளில்., ஆம்., 2018 டிசம்பர் 29 அன்று காலை முதல் இரவு வரை., இயற்கை மிரட்ட., இடி இணைந்து மிரட்ட., இலாக்கா நேரம் தாண்டி., இருள் நம்மை சூழ சேலம்., மெய்யனூர் தொலைபேசி நிலைய அலுவலக வளாகத்தில்., வேலை நிறுத்த கோரிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடத்தினோம்.
வியந்து நின்றோம்., ஆம்., இயற்கை மிரட்டிய நாளில்., இயற்கை மிரட்டினால் என்ன...? இடி மிரட்டினால் என்ன...? என்னை தாக்கும் இயற்கையால் என் உணர்வை தாக்க முடியுமா...? என., இயக்கத்தின் வலிமை உணர்ந்து., இயக்கத்தின் வலிமை உணர்த்திய வேலை நிறுத்த கூட்டமாக., வேலை நிறுத்தம் துவங்கும் முன்பே., வெற்றியை உறுதி செய்த கூட்டமாக., சேலம் கூட்டம் அமைந்தது.
இரவு 07-00 மணி வரை நடைபெற்ற., வேலை நிறுத்த விளக்கக் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தோழர்., தோழியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து., வேலை நிறுத்த விளக்கக் கூட்டத்தில் பங்கேற்ற., அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., சேலம் மாவட்ட., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (NFTE - TEPU) சார்பாக., நெஞ்சார்ந்த நன்றி பாராட்டுக்கள்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து., வேலை நிறுத்த விளக்கக் கூட்டத்தில் பங்கேற்ற., அனைத்து தோழர்., தோழியர்களுக்கும்., சேலம் மாவட்ட., BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் (NFTE - TEPU) சார்பாக., நெஞ்சார்ந்த நன்றி பாராட்டுக்கள்.

























































































No comments:
Post a Comment