ஊதிய மாற்றம் குறித்த...!
அனைத்து சங்க கோரிக்கைகள்...!
BSNL அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்
சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக... DPE நிறுவன செயலர்
திரு. சீமா பகுகுணா அவர்களுக்கும்., DOT நிறுவன
செயலர் திரு. பிரதீப் குமார் பூஜாரி
அவர்களுக்கும்...
&
ஊதிய மாற்றம் குறித்த... கீழ்க்கண்ட கோரிக்கைகளை...
வலியுறுத்தி... 29-03-2017 அன்று கடிதம்
எழுதப்பட்டுள்ளது.
கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:
- 3-வது ஊதிய மாற்றக் குழுவின் செலவினம் மற்றும் லாபம் (Affordability) பிரிவிலிருந்து., BSNL நிறுவனத்திற்கு... விதி விலக்களித்து, BSNL ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு 01-01-2017 முதல் ஊதிய மாற்றம் அமுலாக்கிட வேண்டும்.
- ஊதிய மாற்றம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறைந்த பட்சம் 15% சதவீதம் அமுல்படுத்திட வேண்டும்.
- BSNL ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் செய்திட வேண்டும்.
- ஓய்வூதிய பங்களிப்பு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் (Actual Basic Pay) பிடித்தம் செய்யப்பட வேண்டும்.
- ஆண்டு உயர்வுத் தொகை (Increment) தற்பொழுது வழங்கும் முறைக்கு பதிலாக., சம்பள முரண்பாடுகளை தவிர்த்திட... 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்தது போல... அனைவருக்கும் ஒரே மாதிரியாக 1-ஜனவரி (அல்லது) 1-ஜூலை மாதங்களில் வழங்கிட வேண்டும்.

No comments:
Post a Comment