Thursday 23 February 2017

மனநிறைவான... மாவட்ட செயற்குழு...


நமது மாவட்ட செயற்குழுக் கூட்டம்...
திருச்செங்கோடு., SM., முத்துச்செல்வம் சமுதாயக்
கூடத்தில்... 20-02-2017 திங்கட்கிழமை அன்று காலை 10.30...,
மணிக்கு... எழுச்சியுடன் துவங்கியது.

நமது தொழிற்சங்க ஆசான் தோழர். M.சுப்ரமணியன்
தேசியக்கொடியை ஏற்றி வைக்க... மாவட்ட துணைத் தலைவர்...
தோழர். M.வீரப்பன் நமது சங்க கொடியை ஏற்றி வைக்க,
250-க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள் பங்கேற்க
எழுச்சியுடன் தொடங்கியது.

திருச்செங்கோடு கிளைச் செயலர் தோழர். K.சதாசிவம்
வரவேற்புரை ஆற்ற... மாவட்ட உதவிச் செயலர் தோழர். M.தனபால்
அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

ஆய்படுபொருள் ஏற்புக்கு பின்... மாவட்ட செயலர்...
தோழர். C.பாலகுமார் விவாதத்திற்கான ஆய்படுபொருளை
அறிமுகம் செய்து வைத்து, மாவட்ட சங்க செயல்பாடுகள், இன்றைய
சூழ்நிலை, நடந்து முடிந்த போராட்டங்கள், மாநில செயற்குழு
திட்டமிடல், ஊழியர் பிரச்சனைகள், மத்திய செயற்குழு
முடிவுகள் மற்றும் அமுலாக்கம் பற்றி...
அறிமுக உரை ஆற்றினார்.

"நலந்தானா திட்டமும் - நமது பங்கும்"
என்ற தலைப்பில்... நடைபெற்ற... சேவைக் கருத்தரங்கில்...
மாநில உதவிச் செயலர் தோழர். G.வெங்கட்ராமன் மற்றும் மாநில
சிறப்பு அழைப்பாளர் தோழர். P.கஜேந்திரன் ஆகியோர்
கருத்துரை வழங்கினர்.

மாநிலத் தலைவர் தோழர். P.காமராஜ், மாநிலப் பொருளர்
தோழர். L.சுப்பராயன் மற்றும் TMTCLU... மாநில பொதுச் செயலர்
தோழர். R.செல்வம் ஆகியோர் சிறப்புரை
வழங்கினர்.

மாநிலச் செயலர் தோழர். K.நடராஜன் தனது சிறப்புரையில்,
சேலம் மாவட்டத்தின் சிறப்பு..., BSNL நிறுவனத்தின் இன்றைய நிலை...,
மத்திய செயற்குழு, பொதுத்துறை சங்கங்களின் கருத்தரங்கம்...,
ஊதிய மாற்றம், எதிர்கால கடமைகள், நலந்தானா
திட்டம் பற்றி தனது சிறப்புரையில்...
எடுத்துரைத்தார்.

செயற்குழுவை செழுமைப்படுத்திட... கிளைச் செயலர்கள்...
மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள், ஆய்படு பொருள் விவாதங்களுடன்
தங்கள் பகுதி பிரச்சனைகளை எவ்வித பிரச்சனையும்...
இன்றி..., எடுத்துரைத்தனர்.

நமது சங்கத்தில் உறுப்பினராக இருந்து (ஜூலை 2016 முதல்
ஜனவரி 2017 வரை)..., ஓய்வு பெற்ற தோழர்களுக்கு... பாராட்டு விழா
நடத்தி... கௌரவிக்கப்பட்டனர்.

மாவட்ட செயற்குழுவின் ஒரு பகுதியாக, ஓய்வு பெற்ற...
மாவட்ட சங்க நிர்வாகிகளின் பதவிகளை நிரப்புவதற்கான தேர்வு
நடைபெற்றது. கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக
ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாவட்ட துணைத் தலைவர் : தோழர். P. தேவா, TT., சங்ககிரி.
மாவட்ட துணைத் தலைவர் : தோழர். K. குமார், TT., தம்மம்பட்டி.
மாவட்ட துணைத் தலைவர் : தோழர். B. ராஜமாணிக்கம், TT., ராசிபுரம்.

மாவட்ட உதவிச் செயலர் : தோழர். G. இறைமணி, TT., PGM (O)., சேலம்.
மாவட்ட உதவிச் செயலர் : தோழர். K. அம்மையப்பன், TT., நாமக்கல்.

மாவட்ட அமைப்பு செயலர் : தோழர். K. சுப்ரமணி, TT., தலைவாசல்.

சிறப்பு அழைப்பாளர் : தோழர். S. கண்ணையன், TT (ஓய்வு)., சேலம்.
சிறப்பு அழைப்பாளர் : தோழர். R. பாலசுப்ரமணி, TT (ஓய்வு)., ராசிபுரம்.
சிறப்பு அழைப்பாளர் : தோழர். M. வீரப்பன், JE (ஓய்வு)., ஆத்தூர்.

அதே நிகழ்வில்... பணிக்குழு உறுப்பினர்கள், சேமநலநிதி
உறுப்பினர் மற்றும் விளையாட்டுக்குழு உறுப்பினர்களுக்கான...
தேர்வு நடைபெற்றது. கீழ்க்கண்ட... தோழர்கள்... புதிய...
நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பணிக்குழு உறுப்பினர்கள்:
சேலம் வருவாய் மாவட்டம்:
1. தோழர். A. சண்முகசுந்தரம், TT., மெயின், சேலம்.
2. தோழர். M. அப்துல்லா கான், TT., மெய்யனுர்., சேலம்.
3. தோழர். V. சுந்தரமூர்த்தி, TT., தலைவாசல்.

நாமக்கல் வருவாய் மாவட்டம்:
1. தோழர். K. துரைசாமி, JE., நாமக்கல்.
2. தோழர். M. அருள்மணி, TT., ராசிபுரம்.
3. தோழர். V. கோபால், TT., பள்ளிப்பாளையம்.

சேமநலநிதி உறுப்பினர்:
தோழர். G. ஜெயகுமார், SOA., PGM (O)., சேலம்.

விளையாட்டுக்குழு உறுப்பினர்:
தோழர். R. குமார், TT., ரெட்டிப்பட்டி.

நிறைவாக மாவட்டச் செயலர் தோழர். C. பாலகுமார் விவாதங்களுக்கு
பதில் அளிக்க... தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக... மாவட்டப் பொருளர் தோழர். S. காமராஜ்
நன்றி கூற இரவு 07-30 மணிக்கு செயற்குழு இனிதே முடிவுற்றது.

தோழமையான உபசரிப்பு... அறுசுவை சைவ & அசைவ உணவு...
அற்புதமான விருந்தோம்பல்..., தெருவெங்கும் செங்கோடி தோரணம்...
என... சிறப்பான... ஏற்பாடுகளை... செய்த... திருச்செங்கோடு...
கிளைத் தோழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மாவட்ட சங்கத்தின்... நன்றி பாராட்டுக்கள்...

மாவட்ட செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் முடிவுகள்:
  • மிக குறுகிய காலத்தில் மாவட்ட செயற்குழு கூட்டத்தினை பொறுப்பு ஏற்று, உயர் உபசரிப்புகளுடன் பெரும் செலவுகள் செய்து மாவட்ட செயற்குழுவை  மிகச் சிறப்பாக நடத்திய திருச்செங்கோடு கிளைத் தோழர்களுக்கும், தோழர். S. சின்னசாமி மற்றும் தோழர். K . சதாசிவம் தலைமையிலான வரவேற்புக் குழுவிற்கும் மாவட்ட செயற்குழு பாராட்டுக்களை நன்றியை உரித்தாக்குகிறது.
  • 2017 மார்ச் 4 அன்று சேலத்தில் நடைபெறும் மாநில செயற்குழுவை மிகச் சிறப்பாக நடத்துவது.
  • மத்திய செயற்குழு தீர்மானங்கள் மற்றும் முடிவுகளை நமது சேலம் மாவட்டத்தில் அமுல்படுத்திடவும், போராட்டங்கள் மற்றும் இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திடவும் இச் செயற்குழு வழிகாட்டுகிறது மற்றும் வலியுறுத்துகிறது.
  • மத்திய கூட்டமைப்பு முடிவின்படி நமது சேலம் மாவட்டத்தில் தோழர்கள் அனைவரும் கூடுதலாக ஒரு மணி நேரம் பணி ஆற்றிட இச் செயற்குழு வலியுறுத்துகிறது.
  • 8 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் போனஸ் மற்றும் 78.2-இல் வீட்டு வாடகைப்படி ஆகியவற்றை பெற்றுத்தந்த மத்திய சங்கத்தை மாவட்ட செயற்குழு மனதார பாராட்டுகிறது.
  • கிளை மாநாடு நடத்த வேண்டிய கிளைகள் (காலக்கெடு முடிந்த கிளைகள்) உடனடியாக கிளை மாநாட்டினை நடத்திடவும், மேலும் பணி ஓய்வு மற்றும் இடமாற்றலில் சென்ற கிளைச் செயலர்கள் கிளை மாநாட்டினை 2017 மார்ச் 31-க்குள் நடத்திட இச் செயற்குழு வலியுறுத்துகிறது.
  • TMTCLU மாவட்ட மாநாடு மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கருத்தரங்கம் உள்ளிட்ட முப்பெரும் விழா மார்ச் 4-வது வாரம் (அ) ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்திட இச் செயற்குழு வழிகாட்டுகிறது .
  • அடுத்த மாவட்ட செயற்குழு கூட்டம் ஏப்ரல் நான்காவது வாரத்தில் (அ) மே முதல் வாரத்தில் வேலூரில் (சேலம் தொலைத்தொடர்பு மாவட்டம்) நடைபெறும்.

No comments:

Post a Comment