Monday 23 January 2017

ஒப்பந்த ஊழியர்களுக்கு...
குறைந்தபட்ச... ஊதிய உயர்வு...


1970 ஒப்பந்த ஊழியர்கள் (ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழித்தல்) சட்டவிதி 25-ல் துணைவிதி 2-ன் கீழ் IV என்பது ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் எப்படி அமைய வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. அது 1948 குறைந்தபட்ச ஊதிய உயர்வுக்காக இயற்றப்பட்ட சட்டத்தின்படி ஒருவருக்கொருவர் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டபடி அல்லது குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி அமையலாம் என்கிறது. இந்த நிலையில் தான், குறைந்தபட்ச ஊதியத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்ற மத்திய சங்கங்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக மார்ச் 30, 2016-ல் ரூபாய் 10 ஆயிரம் கொடுக்க வரைவு அறிக்கை (Draft - மசோதா) வெளி வந்தது. அது நகல் மசோதாவாக இருக்கிறதே தவிர கெசட் நோட்டிபிகேஷனாக (Gazette Notification) உத்திரவாக வெளிவரவில்லை. இந்த நகல் மசோதாவை எதிர்த்தே முதலாளிகளின் சம்மேளனங்கள் - அமைப்புகள் பலத்த எதிர்ப்புக் குரல் எழுப்பத் தொடங்கி விட்டன. இன்றைக்கு நாம் வாங்குகின்ற சில ஆயிரத்தை விட மசோதாவின் சிபாரிசு அதிகம் என்றாலும் நாம் முன் வைத்த கோரிக்கை குறைந்தபட்சம் ரூபாய். 15,000/- ஆனால் 7-வது ஊதியக்குழு அறிக்கைக்கு பின்னர் மத்திய சங்கங்களின் கோரிக்கை ரூபாய். 18,000/- இது தர்க்க அடிப்படையிலானது.

நகல் மசோதா பற்றி அமைச்சர்கள் குழு, நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லி தலைமையில் மத்திய தொழிற்சங்க அமைப்புகள், முதலாளிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இப் பேச்சுவார்த்தையில் ரூபாய். 9100/- (26 நாட்கள் X ரூ.350/-) குறைந்தபட்சமாக மாற்றி அமைக்கலாம் எனத் தெரிவித்தது. ஆனால் நம்முடைய தொழிற்சங்கங்கள் இந்த அநீதியை ஏற்க மறுத்துவிட்டன. இதனை அடிப்படையாக வைத்து கடந்த 2016 செப்டம்பர் 2-ல் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை மத்திய தொழிற்சங்கங்கள் வெற்றிகரமாக நடத்தின. நாமும் நமது பகுதியில் NFTE மற்றும் TMTCLU சங்கங்களின் சார்பில் இந்த வேலை நிறுத்தத்தில் பெரும்பான்மையாக கலந்து கொண்டோம்.

பொது வேலைநிறுத்தத்தின் பலனாக மத்திய அரசு (Gazette Notification-யை) அரசிதழை 19-01-2017 அன்று உத்திரவாக வெளியிட்டுள்ளது. 

உத்திரவின் சில முக்கிய அம்சங்கள்:
  • இந்த ஊதிய உயர்வு 19-01-2017 முதல் அமுல் படுத்தப்படும்.
Unskilled Workers: ( நாள் ஒன்றுக்கு)

A பிரிவு நகரம் : ரூபாய். 523/- + VDA : 1.93%
B பிரிவு நகரம் : ரூபாய். 437/- + VDA : 1.61% 
C பிரிவு நகரம் : ரூபாய். 350/- + VDA : 1.29%

Semi-skilled / Unskilled Supervisory Workers: ( நாள் ஒன்றுக்கு) 

A பிரிவு நகரம் : ரூபாய். 579/- + VDA : 2.14%
B பிரிவு நகரம் : ரூபாய். 494/- + VDA : 1.82% 
C பிரிவு நகரம் : ரூபாய். 410/- + VDA : 1.51%

Skilled and Clerical Workers: ( நாள் ஒன்றுக்கு) 

A பிரிவு நகரம் : ரூபாய். 637/- + VDA : 2.35%
B பிரிவு நகரம் : ரூபாய். 579/- + VDA : 2.14% 
C பிரிவு நகரம் : ரூபாய். 494/- + VDA : 1.82%

Highly Skilled Workers: ( நாள் ஒன்றுக்கு) 

A பிரிவு நகரம் : ரூபாய். 693/- + VDA : 2.56%
B பிரிவு நகரம் : ரூபாய். 637/- + VDA : 2.35% 
C பிரிவு நகரம் : ரூபாய். 579/- + VDA : 2.14%

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையினை நாம் வலியுறுத்தி வரும் இவ்வேளையில் இந்த உத்திரவு சற்று ஆறுதலாக உள்ளது. இருப்பினும் இந்த உத்திரவின் சாதகங்களை அமுல் படுத்தி, பாதகங்களை களைவதோடு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற நமது கோரிக்கையினை நோக்கி பயணிப்போம்.

இந்த கோரிக்கை உத்திரவாக வெளிவர காரணமாக இருந்த 2016 செப்டம்பர் 2 பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற NFTE மற்றும் TMTCLU உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், தோழர், தோழியர்களுக்கும் நமது நன்றி. மேலும் இந்த உத்திரவு வெளிவர அழுத்தம் கொடுத்த நமது AITUC சங்கத்திற்கும் நன்றி பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment