Friday, 13 January 2017

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...


பொங்குவோம்...! பொங்கல்...!!

இளைத்த உழவர் கூட்டம்... இன்பம் எனும் ஏற்றம் காண...
இனிய பொங்கலன்று... இரு கரம் கூப்புவோம்...
இயற்கையை வேண்டுவோம்...

இந்நன்நாளில்... சமுதாயச் சண்டை ஒழித்து...
சமத்துவ பொங்கல் பொங்க... மூடத்தனம் அழித்து...
முற்போக்கு பொங்கல் பொங்க... உலகுக்கு உணவை அளிக்கும்...
உழவர்களின் உள்ளம் பொங்க...

தமிழர் வாழ்வில்... இன்னல் தீர்ந்த பொங்கல் பொங்க...
இரும்பென தாக்கியவரையும்...
துரும்பென தடுக்கும் தூய தமிழ் வீரம் பொங்க...
குறும்பாய் குட்டுபவரையும்...
கரும்பாய் காத்து மகிழும்... நம்மவர் நலம் பொங்க...

உலகத் தமிழரிடையே... ஒற்றுமை பொங்கல் பொங்க...
தமிழ் மணம் எங்கும் பொங்க... தமிழ் மண்ணில் தரம் பொங்க...
தமிழர்களே... பொங்குவோம்...! பொங்கல்...!!

அனைவருக்கும்...! NFTE சேலம் மாவட்ட சங்கத்தின்...!!
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்...!!!

No comments:

Post a Comment