Friday 28 October 2016

ஒப்பந்த ஊழியர்களுக்கு...
நியாயமான போனஸ் வழங்கக்கோரி...
நடைபெற்ற... ஆர்ப்பாட்டமும்...
பேச்சுவார்த்தையும்...

















நமது சேலம் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் பணிபுரியும்...,
ஒப்பந்த ஊழியர்களுக்கு..., போனஸ் விதிப்படி 8.33 என்ற அடிப்படையில்
ஒரு மாத சம்பளம் அல்லது குறைந்த பட்சம் ரூ. 7000/-
போனஸ் வழங்க வலியுறுத்தி...,

NFTE - TMTCLU மாவட்ட சங்கங்களின் சார்பாக...,
27-10-2016 வியாழக்கிழமை அன்று மதியம் 12-00 மணிக்கு...,
சேலம் துணைப் பொது மேலாளர் (திட்டம்) அலுவலகம்..., முன்பாக...,
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு..., TMTCLU மாவட்ட தலைவர்
தோழர். N.சிவமோகன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்திற்க்கான..., கோரிக்கை..., முழக்கத்தை...,
NFTE மாவட்ட உதவி செயலர் தோழர்.
P.கஜேந்திரன் எழுப்பினார்.

கோரிக்கைகளை விளக்கி..., NFTE மாவட்ட செயலர் தோழர்.
C.பாலகுமார், NFTE மாநில உதவி செயலர் தோழர். G. வெங்கட்ராமன்,
TMTCLU மாநில உதவி செயலர் தோழர். A.சண்முகசுந்தரம்
மற்றும் TMTCLU மாவட்ட பொருளர் தோழர்.
G.செல்வராஜ் ஆகியோர் கண்டன
சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக..., NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ் நன்றி
கூறி... ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்..., 100-க்கும் மேற்பட்ட தோழர்...,
தோழியர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து..., போனஸ் பிரச்சனையை
மையப்படுத்தி..., நிர்வாகத்துடன் மதியம் 03-00 மணிக்கு பொது
மேலாளர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை
நடைபெற்றது.

இப் பேச்சுவார்த்தையில்..., நிர்வாகத் தரப்பில்...,
முதன்மை பொது மேலாளர் திரு. S.சபீஷ், துணைப் பொது மேலாளர்
(நிர்வாகம்) மற்றும் (திட்டம்) திரு. R.கிருஷ்ணமூர்த்தி, உதவி
பொது மேலாளர் (நிர்வாகம்) திரு. C.கந்தசாமி மற்றும்

நமது NFTE சங்கத்தின் சார்பில்...,
மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார், மாநில உதவி செயலர்
தோழர். G.வெங்கட்ராமன், மாவட்ட உதவி செயலர் தோழர்.
P.கஜேந்திரன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் S.R.செல்வராஜ்
மற்றும் மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

நமது கோரிக்கையின்..., நியாயம் உணர்ந்த...,
நமது முதன்மை பொது மேலாளர்..., உரிய நடவடிக்கை எடுப்பதாக...,
உறுதி அளித்தார். மேலும்..., ஒப்பந்த ஊழியர்களை உடனடியாக
பணிக்கு திரும்ப வேண்டுகோள் விடுத்தார்.
நாம் அதை ஏற்று..., பணிக்கு திரும்ப...,
உறுதி அளித்தோம்.

NFTE - TMTCLU இரண்டு மாவட்ட சங்கங்களின்...,
அறைகூவலை ஏற்று.., உடனடியாக திரண்ட ஒப்பந்த ஊழியர்களுக்கும்..,
உத்திரவாதம் அளித்த மாவட்ட நிர்வாகத்திற்கும்...,
நமது... நன்றி... பாராட்டுக்கள்...

No comments:

Post a Comment