செய்தி... துளிகள்...

- வருமான வரித்தாக்கல் செய்வதற்கு 07-09-2015 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரித்தாக்கல் செய்யாத தோழர்கள் நமது NFTE சங்க அலுவலகத்தில் ON LINE மூலம் வரித்தாக்கல் செய்து கொள்ளவும்.
- போனஸ் வரையறையை இறுதி செய்யும் பணி இன்னும் தொடர்வதால் இந்தாண்டிற்கு தற்காலிக போனசை அறிவிக்கக் கோரி நமது சங்கம் BSNL நிர்வாகத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
- BSNL செல் கோபுரங்களைப் பிரித்து தனி அமைப்பாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்த மத்திய மந்திரி சபையின் முடிவை எதிர்த்து செப்டம்பர் 16 அன்று நாடு தழுவிய தர்ணா நடத்த அனைத்து சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. தர்ணா தலைநகர் டெல்லி, மாநிலத் தலை நகரங்கள் மற்றும் மாவட்டத்தலைநகரங்களில் நடைபெறும்.
- நமது தமிழ் மாநில செயற்குழு 23-09-2015 புதன் கிழமை அன்று மயிலாடுதுறையில் நடைபெறும்.
- காலியாக இருந்த BSNLEU சங்கத்திற்கான JCM தேசியக்குழு உறுப்பினர்கள் இடம் நிரப்பப்பட்டுள்ளது.
- தமிழகம் மற்றும் சென்னை உள்ளிட்ட 10 மாநிலங்களின் வருமானம் குறைந்து வருவதால் கூடுதல் கவனம் செலுத்தி வருமானத்தைப்பெருக்க அந்தந்த மாநில முதன்மைப் பொதுமேலாளர்களுக்கு CMD கடிதம் எழுதியுள்ளார்.
No comments:
Post a Comment