Tuesday, 28 July 2015

அக்னி சிறகுக்கு... நமது அஞ்சலி...  
A.P.J.டாக்டர் அப்துல் கலாம் மறைந்தார்...


இளமையைத் துறந்தவர்... முதுமையை மறந்தவர்... 
இந்தியாவை நேசித்தவர்... இளைஞர்களை சுவாசித்தவர்... 

அணுசக்தியைத் ஏற்றியவர்... மனிதசக்தியைத் போற்றியவர்... 
எளிமையைத் தூண்டியவர்... வலிமையை வேண்டியவர்... 

சிகையை மாற்றாதவர்... சிந்தனையின் ஊற்றானவர்... 
அடக்கம் நிறைந்த மாணவர்... அறிவு பெருக்கிய ஆசிரியர்... 

2020 என தூக்கத்திலும் கனவு கண்டார்... 
2015ல் மீளாத்  துயில் கொண்டார்...

இராமேஸ்வரத்தின் அன்பு மகன்... இந்தியத்தாயின் மூத்த மகன்... 

அண்ணலுக்குப்பின்... நாம் கண்ட நாயகம்...

அப்துல்கலாம்... புகழ் ஓங்குக...

No comments:

Post a Comment