Wednesday, 18 February 2015

சமூக பார்வையோடு... சரித்திர நிகழ்வோடு...
குடந்தை... காந்தி பூங்கா முன்பு... காந்திய வழியில்...
எழுச்சியாக... நடைபெற்ற...
மீத்தேன் எதிர்ப்பு தொடர் முழக்க போராட்டத்தின்...
காட்சிகளும்... கருத்துக்களும்...










































நமது NFTE-BSNL மற்றும் TMTCLU தமிழ் மாநில சங்கங்களின் 
சார்பாக மீத்தேன் எதிர்ப்பு தொடர் முழக்க மற்றும் தர்ணா போராட்டம்
குடந்தை... காந்தி பூங்கா முன்பு... காந்திய வழியில்... 17-02-2015 
அன்று சமூக உணர்வுடன் நடைபெற்றது.

காலை 10.00 மணிக்கு துவங்கிய தர்ணா போராட்டத்திற்கு 
"அஞ்ச நெஞ்சன்" தோழர். ஆர்.கே மற்றும் நமது மாநிலத் தலைவர் 
தோழர். M.லட்சம் ஆகியோர் கூட்டுத் தலைமை தாங்கினர்.

குடந்தை மாவட்ட செயலர் தோழர். C.கணேசன் 
அனைவரையும் வரவேற்று பேசினார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்த கையேட்டை தோழர். 
ஆர். கே வெளியிட மு.நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு 
AITUC மாநிலத் தலைவர் தோழர். திருப்பூர்.K.சுப்பராயன்
அவர்கள் பெற்றுக்கொண்டார்.  

எழுச்சி மிகு... தர்ணா போராட்டத்தை... துவக்கி வைத்து 
உரை ஆற்ற இருந்த... AITUC தமிழ் மாநில பொதுச் செயலர் தோழர். 
T.M. மூர்த்தி அவர்கள் அவசர அலுவல் பணியின் காரணமாக பங்கேற்க முடியாத சூழலில்... நமது மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர். R.ஜெயபால் துவக்கி வைத்து உரை ஆற்றினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு
உறுப்பினர் தோழர். மு.வா. பாரதி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்
குடந்தை நகர பொருளர் தோழர். ஜார்ஜ், குடந்தை மாவட்ட
துணைப் பொது மேலாளர் (CM) திரு. R.ராஜேந்திரன் அவர்கள்,
உதவிப் பொது மேலாளர் (Transmission) திரு. M.S. ராதாகிருஷ்ணன்
அவர்கள், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மத்திய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர். P.காமராஜ், 
மாநில உதவி செயலர் தோழர். K.நடராஜன் (தஞ்சாவூர்), மாநில துணைத்
தலைவர் தோழர். S. மனோகர் (திருச்சி), மாநில அமைப்பு செயலர்
தோழர்கள். V. மாரி (காரைக்குடி) மற்றும் தோழர். G. வெங்கட்ராமன் (சேலம்), 
TMTCLU தமிழ் மாநில பொதுச் செயலர் தோழர். R.செல்வம், தமிழ் மாநில மகளிர் மைய ஒருங்கிணைப்பாளர் தோழியர். A.லைலா பானு, 
தமிழ் மாநில இளைஞர் மைய ஒருங்கிணைப்பாளர் தோழர். 
G.சுபேதார் அலிகான், கடலூர் மாவட்ட செயலர். தோழர். R.ஸ்ரீதர், 
சேலம் மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார், 
கடலூர் மாவட்ட TMTCLU மாவட்ட செயலர் தோழர். G.ரங்கராஜ்,
ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

தஞ்சை தோழர். "வல்லம்" இக்பால் கவிதை நயத்துடன்...
கருத்துரை வழங்கினார்.   

பல்வேறு... பணிகளுக்கு... மத்தியில் நம் அழைப்பை ஏற்று குறிப்பிட்ட
நேரத்திற்க்கு வருகை புரிந்து... எழுச்சி மிகு பேருரை...
நிகழ்த்தினார். மு.நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு AITUC
மாநிலத் தலைவர் தோழர். திருப்பூர்.K.சுப்பராயன் அவர்கள்
போராட்ட களம்... தர்ணா பந்தல்... நிரம்பியிருந்த சூழ்நிலையில் சிறு
சத்தமின்றி அனைவரும் கவனிக்கும் வண்ணம் தோழரின் உரை சிறப்பாக
இருந்தது. மீத்தேன் திட்டம், சர்வதேச சூழ்நிலை, தேசிய நிலை, மாநில
நிலை, அரசின் நிலை, பொருளாதார கொள்கைகள், உழைக்கும் வர்க்கம்
சந்திக்கும் சவால்கள், மக்களின் அறியாமை என அனைத்து 
விஷயங்களையும் விளக்கி நேர்த்தியாக சாமானிய மக்களுக்கும் 
புரியும் வகையில் உரை நிகழ்த்தினார்.

நமது மாநில செயலர் தோழர். R.பட்டாபிராமன் தனது சிறப்புரையில்...
விஞ்ஞான பூர்வமாக... மீத்தேன் திட்டம் என்றால் என்ன...! 
இதை எதிர்க்க வேண்டிய அவசியம் ஏன்...! நமது பார்வையில் மீத்தேன்
திட்டம்... அரசியல் பார்வையில் மீத்தேன் திட்டம் ... 
மற்ற நாடுகளில் மீத்தேன் திட்டம்... இதனால் ஏற்படும் அபாயங்கள்... 
பின் விளைவுகள்... மக்களின் அறியாமை... அரசியல் நிலை... 
குறித்து மிக சிறப்பாக எடுத்துரைத்தார்.

"அஞ்ச நெஞ்சன்" தோழர். ஆர்.கே தனது நிறைவு பேருரையில்...
இது நம்முடைய மண்... நமக்கே சொந்தம்... என்றும்... தாய்க்கு நிகரான...
நம் தாய் மண்ணை பாதிக்கக்கூடிய எந்த ஒரு நிகழ்வையும்...
நம்மால் ஏற்க்கமுடியாது... விடுதலை போராட்டத்தில்...
நம்மால் பங்கேற்க முடியவில்லை... அந்த வாய்ப்பு கிடைக்க வில்லை...
மண் காக்கும்... இந்த மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தில்...
நிச்சயம் நாம்... பங்க்கேற்போம்...
நம்முடைய இந்த மீத்தேன் எதிர்ப்பு போராட்டம்...
போராடாதவர்களுக்கும்... போராட்ட உணர்வை... தூண்டி இருப்பது...
நல்ல அம்சம்... இது நமக்கு கிடைத்த வெற்றி...
என... எடுத்துரைத்து... உரையாற்றினார்.

இறுதியாக மாலை 05.00 மணிக்கு... TMTCLU மாநில பொருளர் 
தோழர். M.விஜய் ஆரோக்யராஜ் நன்றி கூறி தர்ணா போராட்டத்தை
நிறைவு செய்து வைத்தார்.

வரலாற்று... சிறப்புமிக்க... இந்த தர்ணா போராட்டத்தில் 
மாநிலம் முழுவதும் இருந்து NFTE-BSNL மற்றும் TMTCLU சார்பாக... 
600க்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment