2015 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

கடந்தது மீண்டும் திரும்பாது தோழா !
நடந்ததையென்னி வீண்கவலையெதற்கு !
- கடந்ததைக் கற்றலாய் கருதி நீ!
- கடக்கப் போகும் பாதையை கவனி!
- பாதை முறையானால் பயணங்கள் முழுமையடையும் !
- பகல்கனவு மறந்து உழைக்கத் தொடங்கு!
- வெற்றி துயில் கொள்ளும் உன் மடியில்!
- துக்கங்கள் தூள்தூளாகட்டும் துளியும் மிச்சமின்றி!
- வழியைத் தேடி வாழ்க்கையைத் தொலைக்காதே!
- உன்னால் உருவாக்க முடியும் உனக்கானதை..
- பின் தொடரட்டும் உலகம் உன் வழியை !
- மாற்றங்கள் மலர்வது இயற்கையின் இயல்பு!
- மலரும் மாற்றங்கள் நல்லவையாகட்டும்!
- எட்டிச் செல்லட்டும் ஏக்கங்களும் ஏமாற்றங்களும்!
- இனிய மாற்றங்கள் தரட்டும் இப்புத்தாண்டு...
- அனைவருக்கும்
- இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment