இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்...

மாட்டுக் குடிலிலே மரியன்னை மடியிலே....
மனிதனாய்ப் பிறந்துவிட்டான் - இயேசு
புனிதனாய்ப் பிறந்துவிட்டான் - அவன்
தொட்டிலில் துயில்கையில் தேவர்கள் வாழ்த்தினர்
தேவனே பிறந்துவிட்டான் - எங்கள்
ஜீவனாய்ப் பிறந்து விட்டான்...!
தச்சனின் மகனாகத் தத்துவ ஞானியாய்...
தெய்வமாய்ப் பிறந்துவிட்டான் - இயேசு
தெய்வமாய்ப் பிறந்துவிட்டான் - அவன்
பச்சிளங் குழந்தையாய்ப் பாவங்கள் நீக்கிட
பாரினில் பிறந்துவிட்டான் - இயேசு
பாரினில் பிறந்துவிட்டான்...!
தட்டினால் திறக்குமே கேட்டாலே பெறுவீரே...
தேடினால் கிடைக்குமென்றான் - இயேசு
தேடினால் கிடைக்குமென்றான் - அவன்
பட்ட துயரினைப் பார்த்த கணத்திலே
பாவிகள் வருந்தவில்லை - அந்தப்
பாவிகள் வருந்தவில்லை...!
மேய்ப்பராய் வளர்ந்தான் மேதினியில் வாழ்ந்தான்
மிருகங்களை நேசித்தானே - இயேசு
மிருகங்களை நேசித்தானே - அவன்
தூய்மையாய்.., வாய்மையாய்..., உண்மையாய்..., நேர்மையாய்...
தெய்வமாய் வாழ்ந்திட்டானே - இயேசு
தெய்வமாய் வாழ்ந்திட்டானே...!
அனைவருக்கும்..., NFTE - BSNL சேலம் மாவட்ட சங்கத்தின்...
இனிய... கிறிஸ்துமஸ்... நல் வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment