Friday, 21 October 2016

NFBW கூட்டமைப்பு... கூட்டமும்... முடிவும்...







நமது சேலம் மாவட்ட NFBW கூட்டமைப்பின் கூட்டம் 19-10-2016
புதன் கிழமை அன்று SEWA - BSNL மாவட்ட சங்க
அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு..., NFBW அமைப்பின் இணை கன்வீனரும்
SEWA - BSNL மாவட்ட தலைவருமான தோழர்.
R.மாதையன் தலைமை தாங்கினார்.

NFBW அமைப்பின் கன்வீனரும் NFTE மாவட்ட செயலருமான
தோழர். C.பாலகுமார் அனைவரையும் வரவேற்று..., கூட்டத்தின்...,
நோக்கங்களை விளக்கி உரையாற்றினார்.

NFTE - BSNL சார்பாக..., 
மாநில உதவி செயலர் தோழர். G.வெங்கட்ராமன், மாவட்ட 
அமைப்பு செயலர் தோழர். S.R.செல்வராஜ், 
TEPU சார்பாக...,
மாநில துணைத் தலைவர் தோழர். P.அன்பழகன், 
SEWA - BSNL சார்பாக...,
மாநில துணைத் தலைவர் தோழர். S.பன்னீர்செல்வம், 
மாவட்ட செயலர் தோழர். G.மணிவண்ணன், 
BTEU சார்பாக..., 
மாவட்ட செயலர் தோழர். M.பெரியசாமி 
ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் 
கருத்துக்களை பதிவு செய்தனர்.

இறுதியாக..., BTEU மாவட்ட செயலர் தோழர். M.பெரியசாமி 
நன்றி கூறி... கூட்டத்தை முடித்து வைத்தார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: 
  • நமது மாவட்ட NFBW கூட்டமைப்பு சார்பாக வருகின்ற 2016 அக்டோபர் 24  அன்று நடத்தப்படும் தர்ணா போராட்டத்தை வெற்றிகரமாக்க இணைந்து செயல்படுவது.
  • தர்ணா போராட்டத்திற்கு சுற்றறிக்கை வெளியிடுவது.
  • நமது NFBW கூட்டமைப்பில் BTEU சங்கம் இணைந்துள்ளதை அடுத்து..., BTEU மாவட்ட செயலர் தோழர். M.பெரியசாமி இணை கன்வீனராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • நமது கூட்டமைப்பு சார்பாக நவம்பர் மாதத்தில் மிகச் சிறப்பான விற்பனை மேளா நடத்துவது.
  • NFBW கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் நவம்பர் முதல் வாரத்தில் நடத்துவது.

No comments:

Post a Comment