AUAB தலைவர்கள் CMD உடன்
சந்திப்பு - ஓர் பார்வை
சந்திப்பு - ஓர் பார்வை

10-01-2019 அன்று தொலைத்தொடர்பு (DOT) துறையின் கூடுதல் செயலர் திரு. அன்ஷு பிரகாஷ்., அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது., 3-வது ஊதிய மாற்றம் மற்றும் அதன் பிரச்சனை குறித்து., AUAB தலைவர்கள் மீண்டும் ஒரு முறை BSNL நிர்வாகத்துடன் விவாதித்து முடிவு செய்த பிறகு., அடுத்த வாரத்தில் தன்னை வந்து சந்திக்குமாறு வழிகாட்டி இருந்தார். அதன் அடிப்படையில்., AUAB தலைவர்கள் 16-01-2019 இன்று நமது CMD அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப் பேச்சுவார்த்தையில் நிர்வாக தரப்பில்., இயக்குனர் (மனிதவளம்) திருமதி. T.சுஜாதா ராய் மற்றும் AUAB தரப்பில்., NFTE பொதுச் செயலர் மற்றும் AUAB தலைவர் தோழர். C.சந்தேஷ்வர் சிங்., BSNLEU பொதுச் செயலர் மற்றும் AUAB ஒருங்கிணைப்பாளர் தோழர். P.அபிமன்யூ., SNEA பொதுச் செயலர் தோழர். K.செபாஸ்டின் மற்றும் AIBSNLEA பொதுச் செயலர் தோழர். பிரகலாத்ராய்., AIGETOA பொதுச் செயலர் தோழர். ரவி ஷில் வர்மா., BSNLMS பொதுச் செயலர் தோழர். சுரேஷ்குமார்., BSNL ATM உதவி பொதுச் செயலர் தோழர். ரேவதி பிரசாத் மற்றும் BSNLOA துணை பொதுச் செயலர் தோழர். H.P.சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
இப் பேச்சுவார்த்தையில்., 3-வது ஊதிய மாற்றம் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இவ் விவாதத்தில்., 15% சதவீத ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றம் நடைபெற வேண்டும் என AUAB தலைவர்கள் உறுதிபட கோரினர். இதற்கு., நமது CMD அவர்கள் BSNL நிர்வாகமும் தனது முந்தைய நிலைப்பாடான 15% சதவீத ஊதிய நிர்ணயம் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகாது என உறுதி அளித்தார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடப் படலாம் என்பதையும்., 3-வது ஊதிய மாற்றத்தை இறுதி செய்வதற்கு தேவையான காலம் மிக குறைவாக உள்ளதையும் AUAB தலைவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும்., ஊதிய மாற்றத்தில் சாதகமான உடன்பாடு., குறித்த நேரத்தில் வரவில்லை என்றால் தங்களின் போராட்டத்தை மீண்டும் துவக்குவதை தவிர்க்க முடியாது என்றும் தலைவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.
தோழமையுடன்...
ச. பாலகுமார், மாவட்டச் செயலர்.,
NFTE - BSNL., சேலம் - SSA.
No comments:
Post a Comment