Thursday 21 February 2019

BSNL மற்றும் MTNL சீரமைப்பு


21-02-2019 இன்று DCC எனப்படும் DIGITAL COMMUNICATIONS COMMISSION (முந்தைய TELECOM COMMISSION) தொலைத்தொடர்பு ஆணையம் டெல்லியில் கூடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

DCC தொலைத்தொடர்பில் கொள்கை முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த உச்சக்கட்ட அமைப்பாகும். எனவே., இந்தக் கூட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.

இன்று நடைபெறும் DCC கூட்டத்தில்., BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கப் படும் என தெரிகிறது.

BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் ஏற்கனவே அரசிடம் சமர்ப்பித்துள்ளனர்.

அவற்றில்., ஓய்வு பெறும் வயதை 58 என குறைப்பது. அதன் மூலம் 2019-2020 நிதியாண்டில் சுமார் 3000/- கோடி சம்பளச் செலவைக் குறைக்க வகை செய்வது.

விருப்ப ஓய்வுத்திட்டத்தை (VRS) அமுல்படுத்துவதன் மூலம் மேலும்., 3000/- கோடி சம்பளச் செலவைக் குறைப்பது.

BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றையை உடனடியாக ஒதுக்குவது.

காலியாக உள்ள கட்டிடம் மற்றும் நிலங்களை வணிகரீதியாகப் பயன்படுத்தி வருமானம் சேர்ப்பது போன்ற ஆலோசனைகள் இடம் பெற்றுள்ளன.

இது தவிர சீரமைப்பு சம்பந்தமாக தொலைத்தொடர்பு துறை (DOT) தனது பங்காக சில ஆலோசனைகளை முன் வைத்துள்ளது.

அவற்றில்., ஊழியர்களின் சம்பளச்செலவு நிறுவனங்களின் மிகப்பெரிய பிரச்சனையாக கருதப்படுவதால் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஊழியர் மற்றும் அதிகாரிகளை BBNL., BHARAT NET போன்ற நிறுவனங்களுக்கு மாற்றுவதன் மூலம் சம்பளச் செலவினங்களை பரவலாக்குவது.

நிறுவனங்களின் அன்றாடச் செலவுகளை சந்திக்கவும்., நிதி ஆதாரங்களை உறுதிப்படுத்தவும் வங்கிகளிடம் கடன் கோருவது போன்ற பல்வேறு ஆலோசனைகளை DOT முன் வைத்துள்ளது.

இன்றைய DCC கூட்டத்தில்., BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான முடிவுகள் எடுக்கப்படும்.

BSNL நிறுவனத்திற்கு 2100Mhz அலைவரிசையில் 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் இறுதி ஒப்புதல் மத்திய அமைச்சரவையிடம் பெறப்படும்.

எனவே., இன்று நடைபெறும் DCC கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளுக்காக போராடியும் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் நடத்தியும் தங்களது எதிர்ப்பை அரசிற்கு மிக வலுவாக தெரிவித்துள்ளதால்.

இன்று நடைபெறும் DCC கூட்டம் BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைப்பு செய்வதற்கான முடிவுகளை நிதானத்தோடு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

No comments:

Post a Comment