Sunday 28 May 2017

NFBW கூட்டமைப்பின் கூட்டமும்...! முடிவுகளும்...!



நமது NFTE சங்க தலைமையிலான...,
NFBW கூட்டமைப்பின் கூட்டம் 24-05-2017 புதன்கிழமை
அன்று டெல்லியில் உள்ள... நமது NFTE சங்க...,
அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு... TEPU அகில இந்திய பொதுச் செயலர் 
தோழர். V. சுப்புராமன் தலைமை தாங்கினார். நமது NFTE பொதுச்
செயலர் தோழர். C. சந்தேஷ்வர் சிங் அனைவரையும் 
வரவேற்று., கூட்டத்தின் நோக்கம் குறித்து., 
அறிமுகஉரை ஆற்றினார்.

இக் கூட்டத்தில்... NFTE அகில இந்திய தலைவர் 
தோழர். இஸ்லாம் அகமது, NFTE தலைமை ஆலோசகர் தோழர். 
R.K. கோஹ்லி, NFTE சம்மேளன செயலர்களான தோழர்கள்.
S.S. கோபாலகிருஷ்ணன் மற்றும் K.S. குல்கர்னி,
&
TEPU..., அகில இந்திய துணை பொதுச் செயலர்
தோழர். A.L. அப்துல் சமாட், SEWA BSNL..., அகில இந்திய
பொதுச் செயலர் தோழர். N.D. ராம் ஆகியோர் கலந்து கொண்டு 
தங்களது., கருத்துக்களையும்..............................!
ஆலோசனைகளையும் வழங்கினர்.

விவாதத்திற்கு பின்...! இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
  • கோழிக்கோட்டில் நடைபெற்ற NFTE மத்திய செயற்குழு முடிவின் படி., நமது கூட்டணி மற்றும் ஊழியர் சங்கங்களை மட்டும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட தேசிய தொழிலாளர் கூட்டணியில் அதிகாரிகளின் சங்கங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில்., இனி இக்கூட்டமைப்பு தேசிய ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு என்ற பெயரில் செயல்படும். என்று எடுக்கப்பட்ட., இந்த முடிவை., இக்கூட்டம் ஒருமனதாக ஏற்றுக் கொள்கிறது.
  • BSNL ஊழியர்களுக்கு உடனடியாக., தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளடக்கிய ஊதிய மாற்றக் குழுவை உருவாக்கிடவும்., செலவினம் மற்றும் லாபம் பிரிவிலிருந்து BSNL நிறுவனத்திற்கு விதி விலக்களித்து., 15% சதவீத ஊதிய உயர்வு வழங்கிடவும்., வழிகாட்டுதல் வெளியிடக்கோரி DPE மற்றும் DOT நிறுவனங்களை வலியுறுத்தி மாவட்ட, மாநில., மத்திய தலை நகரங்களில் 2017 ஜூன் 14 அன்று கவன ஈர்ப்பு நாள் மற்றும் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
  • ஊழியர்களுக்கான., ஊதிய மாற்றம் குறித்த வழிகாட்டுதலை உடனடியாக... DPE நிறுவனம் வெளியிடக்கோரி... மத்திய சங்கங்களோடு இணைந்து., மத்திய அரசுக்கு நிர்பந்தம் மற்றும் வேண்டுகோள் விடுத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • தேசிய ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பை..., உடனடியாக... மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் உருவாக்கிட வேண்டும்.

No comments:

Post a Comment