Monday 22 May 2017

35-வது தேசியக்குழு கூட்டமும்...! முடிவுகளும்...!


35-வது தேசியக்குழு கூட்டம் (NJCM)., 11-05-2017 அன்று...
நமது கார்ப்பரேட் அலுவலகத்தில் இயக்குனர் (மனிதவளம்).,
திருமதி. சுஜாதா ராய், அவர்கள் தலைமையில் 
நடைபெற்றது.

கீழ்க்கண்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன:
  • ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம், EPF மற்றும் ESI அமுல்படுத்துவது சம்பந்தமாக: BSNL மத்திய நிர்வாகம் இப்பிரச்சனையை தீவிரமாக கண்காணிக்கும்.
  • TT மற்றும் JE இலாக்கா போட்டித் தேர்வு எழுதிட., தற்போது உள்ள தகுதி  நிபந்தனை தளர்த்தப்படவேண்டும்: தற்போது அறிவிக்கப்பட்டுள்ள TT தேர்வில் பத்தாம் வகுப்பு தேறியவர்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும் என்ற தகுதி நிபந்தனையை தளர்த்துவதற்கும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்துவதற்கும், TT ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தம் செய்யப்பட வேண்டும். எனவே அடுத்த தேர்வில் இது பற்றி பரிசீலிக்கப்படும். (NFTE சங்க உறுப்பினர்களின் கருத்தாக: TT ஆளெடுப்பு விதிகளில் உரிய திருத்தம் செய்வதற்கு, காலதாமதம் ஆகும் என்பதால், 2017 ஜூலையில் நடைபெறக் கூடிய தேர்வினை குறிப்பிட்ட காலத்தில் நடத்திட வேண்டும் என்றும்..., அடுத்த தேர்வுக்கு முன் தகுதி நிபந்தனையை தளர்த்துவதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.)
  • Sr.Accountant சம்பள விகிதம் உயர்த்துதல் மற்றும் தகுதி உயர்த்துதல் சம்பந்தமாக: தொலைத்தொடர்பு (DOT) துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு., புதிய ஜனாதிபதி உத்திரவு வழங்கப்படும்.
  • இலாக்கா பதவி உயர்வு தேர்வுகளில் SC / ST ஊழியர்களுக்கு., தகுதி மதிப்பெண்களில் தளர்வு வழங்குவது சம்பந்தமாக: இலாக்கா பதவி உயர்வு தேர்வுகளில் SC / ST ஊழியர்களுக்கு., தகுதி மதிப்பெண்களில் தளர்வு வழங்குவது என்பது சிக்கலான பிரச்சனையாகும். ஆனாலும் தனி நபர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
  • இலாக்கா பதவி உயர்வு தேர்வுகளில் SC / ST ஊழியர்களுக்கு சலுகைகள் வழங்குவது சம்பந்தமாக: தொலைத்தொடர்பு (DOT) துறையின் வழிகாட்டுதல் பின்பற்றப்படும்.
  • தேக்கநிலை ஆண்டு உயர்வுத்தொகை (Stagnation Increment) : நிர்வாகத் தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை., என்றாலும்..., தொலைத்தொடர்பு (DOT) துறையின் வழிகாட்டுதல் பெறப்பட்டு முடிவு செய்யப்படும்.
  • 01-01-2017 முதல் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பு பிடித்தம் செய்வது சம்பந்தமாக: BSNL நிர்வாகத்தால் ஏற்கனவே அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இருந்தாலும்..., ஓய்வூதிய பங்களிப்பு பற்றி தீர்வு செய்யப்படும் போது, இப்பிரச்சனை பற்றி முடிவு செய்யப்படும்.
  • TSM ஊழியர்களை தொலைத்தொடர்பு (DOT) ஊழியர்களாக கருதுவது சம்பந்தமாக: இப்பிரச்சனை பற்றிய., நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது சாதகமாக உள்ளது. மேலும்..., இத்தீர்ப்பின் நகல் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் மூலமாக தொலைத்தொடர்பு துறையின் ஒப்புதல் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
  • ஊழியர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தினை பிடித்தம் செய்வது தொடர்பாக: இப்பிரச்சனை தொடர்பாக., அனைத்து மாவட்டங்களிலும் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதுவரை., நிலுவைப்பிடித்தம் செய்வதை., நிறுத்தி வைக்க உத்திரவு வெளியிடப்படும்.
  • BSNL ஊழியர்களுக்கு அரசியல் தொடர்பு கூடாது என்ற நன்னடத்தை விதிகளை மாற்றுவது சம்பந்தமாக: BSNL ஊழியர்களுக்கு அரசியல் தொடர்பு கூடாது என்ற நன்னடத்தை விதிகளை மாற்றுவது பற்றி DPE வழிகாட்டுதல் பின்பற்றப்படும்.

போதிய... நேரமின்மை... காரணமாக...
எஞ்சியுள்ள பிரச்சனைகள்... விவாதிக்கப்படவில்லை...
விரைவில்... அடுத்த... தேசியக்குழு கூட்டம்... நடத்தப்படும்...
எனவும்... அக்கூட்டத்தில்... ஏனைய... பிரச்சனைகள்...
பற்றி... விவாதிக்கப்படும்... எனவும்... நிர்வாக...
      தரப்பில்... கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment