Saturday 15 April 2017

ஒப்பந்த ஊழியர்களுக்கு...! ஊதிய உயர்வு...!


நமது NFTE மற்றும் TMTCLU உள்ளிட்ட... அனைத்து...
மத்திய... தொழிற்சங்கங்கள்., இணைந்து..., ஒப்பந்த ஊழியர்களுக்கு.,
குறைந்தபட்ச ஊதியம்... ரூ. 18,000/- வழங்க வேண்டும். உள்ளிட்ட...
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி... 2016 செப்டம்பர் 2.,
பொது...! வேலை...! நிறுத்தத்திற்கான....................!
அறிவிப்பு...! விடுத்ததின்...! காரணமாக...!
&
மத்திய தொழிலாளர் அமைச்சகம்...
ஒப்பந்த ஊழியர்களுக்கான., புதிய., குறைந்தபட்ச ஊதியம் 
பற்றிய, அறிவிப்பை 01-09-2016 அன்று வெளியிட்டது. பின்னர் நாம்
நடத்திய வரலாற்று சிறப்பு மிக்க செப்டம்பர் 2 வேலை 
நிறுத்தத்தின்...! விளைவாக...! 19-01-2017 அன்று...!
அறிவிப்பு, அரசிதழாக (Gazette Notification)
வெளியிடப்பட்டது.

இந்த ஊதிய உயர்வை நமது BSNL நிறுவனத்தில் பணிபுரியும்...
ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட..., நமது NFTE மற்றும்
TMTCLU மாநில..., சங்கங்கள்... தொடர்ந்து...
வலியுறுத்தியத்தின் விளைவாக...

நமது மாநில நிர்வாகம்., கார்ப்பரேட் அலுவலகத்தின்...
வழிகாட்டுதல் பெற்று...................., 07-03-2017 அன்று., 
அனைத்து...!
மாவட்டங்களுக்கும்.,
ஊதிய உயர்விற்கான..., மத்திய...
அரசின்... 
 அரசிதழை... 
அமுல்படுத்தும்படி...
வழிகாட்டும்...! உத்திரவினை..., 
வெளியிட்டது.

இதனை தொடர்ந்து...
ஒப்பந்த ஊழியர்களின்... புதிய ஊதிய...
உயர்விற்கான உத்திரவை (B நகரம் : ரூ. 437/- மற்றும் C நகரம் : ரூ. 350/-)
உடனடியாக நமது மாவட்டத்தில் அமுல்படுத்திட வலியுறுத்தி,
15-03-2017 அன்று முதன்மை பொது மேலாளர் அவர்களை
சந்தித்து  அதற்கான ஆவணங்களை வழங்கினோம். 
நமது கோரிக்கை ஏற்கப்பட்டு..., உரிய...
நடவடிக்கை...!
எடுப்பதாக......!
உறுதி 
அளித்தார்.

இந்நிலையில்... 12-04-2017 அன்று... மீண்டும்., 
நமது முதன்மை பொது மேலாளர் அவர்களை சந்தித்து., 
ஒப்பந்த ஊழியர்களின்... புதிய ஊதியம்., அமுலாக்கம் பற்றி...
விவாதித்தோம். நமது நியாயம் உணர்ந்த... நமது...
முதன்மை 
பொது மேலாளர் அவர்கள்...
&
உடனடியாக... நம் முன்னே... ஒப்பந்த ஊழியர்களின்... 
ஊதிய உயர்விற்கான., கோப்பிற்கு (12-04-2017 அன்றே...) ஒப்புதல்
அளித்தார். மேலும்... இவ்வார இறுதிக்குள் உத்திரவு 
வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார்.

நமது NFTE மற்றும் TMTCLU மாவட்ட சங்கங்களின்... 
தொடர்., முயற்சி காரணமாக... 13-04-2017 அன்று., நமது சேலம்...
மாவட்ட நிர்வாகம்., ஒப்பந்த ஊழியர்களுக்கு... புதிய 
ஊதியத்திற்கான.......!
( சேலம் நகரம்: 437/- + VDA,
சேலம் 
ஊரகம்: 350/- + VDA) உத்திரவை...,
வெளியிட்டுள்ளது.

இந்த உத்திரவின் படி:
  • சேலம் நகர பகுதிகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ. 437/- மற்றும் VDA 1.61% வழங்கப்படும்.
  • சேலம் ஊரக பகுதிகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ. 350/- மற்றும் VDA 1.29% வழங்கபப்டும்.
  • புதிய சம்பளம் 01-04-2017 முதல் வழங்கப்படும்.
  • 19-01-2017 முதல் 31-03-2017 வரை நிலுவை தொகை ஏப்ரல் மாத சம்பளத்தில் வழங்கப்படும்.
  • சேலம் நகர பகுதிகளில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 125/- வீதம் ஒரு மாதத்திற்கு (26 நாட்களுக்கு) ரூ. 3250/- ஊதிய உயர்வு கிடைக்கும்.
  • சேலம் ஊரக பகுதிகளில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 100/- வீதம் ஒரு மாதத்திற்கு (26 நாட்கள்) ரூ. 2600/- ஊதிய உயர்வு கிடைக்கும்.
  • 19-01-2017 முதல் 31-03-2017 வரை முழுமையாக பணிக்கு வந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு 61 நாட்களுக்கு நிலுவை தொகையாக சேலம் நகரம்: ரூ. 7625/- ம் சேலம் ஊரகம்: ரூ. 6100/-ம் வழங்கப்படும்.                      

ஒப்பந்த ஊழியர்களுக்கு...!
உயர்த்தப்பட்ட...! ஊதியத்திற்கான...!
உத்திரவை...! உத்திரவாதம்...! அளித்தப்படி...!
உடனடியாக...! வெளியிட்ட...!
நமது முதன்மை பொது மேலாளருக்கு...!
நமது நன்றி பாராட்டுக்கள்...!

No comments:

Post a Comment