Friday 28 April 2017

தலைமை செயலகக் கூட்டமும்...! முடிவுகளும்...!



நமது மாவட்ட சங்கத்தின் தலைமை செயலகக்
கூட்டம்... 26-04-2017 புதன்கிழமை அன்று மாலை 05-30 மணிக்கு
மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட உதவி செயலர்
தோழர். G.வெங்கட்ராமன் தலைமையில்
நடைபெற்றது.

மாவட்ட உதவி செயலர் தோழர். K.தேவராஜன் வரவேற்புரை
ஆற்ற... மாவட்ட உதவி செயலர் தோழர். P.கஜேந்திரன்
அஞ்சலி...! உரை...! நிகழ்த்தினார்.

மாவட்ட செயலர் தோழர். C.பாலகுமார் விவாதத்திற்கான
ஆய்படுபொருளை அறிமுகம் செய்து வைத்து, மாற்றல் கொள்கை,
TMTCLU மாவட்ட மாநாடு திட்டமிடல், மாவட்ட சங்க 
செயல்பாடுகள், இன்றைய சூழ்நிலை மற்றும் 
ஊழியர் பிரச்சனைகள் பற்றி அறிமுக 
உரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில்... 24 கிளை செயலர்கள், 18 மாவட்ட சங்க...,
நிர்வாகிகள் மற்றும் முன்னணி தோழர்கள் கலந்து
கொண்டு விவாதத்தில் பங்கேற்றனர்.

இறுதியாக... மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ் நன்றி கூற
இரவு 09-00 மணிக்கு தலைமை செயலகக் கூட்டம்...
இனிதே முடிவுற்றது.

தலைமை செயலகக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
  • 2017 மாற்றல் கொள்கையை., மாற்றல் கொள்கை விதிப்படி சுமூகமாக எந்த ஒரு ஊழியருக்கும் சாதக., பாதகங்கள் இல்லாமல் நியாயமான முறையில் விரைந்து முடித்திட இச் செயலக கூட்டம் வலியுறுத்துகிறது (அ) வழி காட்டுகிறது.   
  • மாநில சங்கத்தின் வழிகாட்டுதல் பெற்று., சேலம் மாவட்டத்தை தத்தெடுத்திட., மாற்றல் கொள்கை அமுலாக்கத்திற்கு பிறகு., திட்டமிட இச் செயலக கூட்டம் வலியுறுத்துகிறது (அ) வழி காட்டுகிறது.
  • TMTCLU மாவட்ட மாநாட்டை 2017 மே மாத இறுதிக்குள் மிகச்  சிறப்பாக நடத்துவது.
  • மாவட்ட செயலர் தனது சொந்த பணியின் காரணமாக வெளியூர் செல்ல இருப்பதால் (01-05-2017 முதல் 05-05-2017 வரை)., மாவட்ட செயலர் (பொறுப்பு) மற்றும் நகர., ஊரக கிளைகளின் தொடர்புக்கு பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுத்திட முடிவு செய்யப்பட்டது. அதன் படி: பொறுப்பு மாவட்ட செயலராக தோழர். P.கஜேந்திரன், நகர கிளைகளின் பொறுப்பாளர்களாக தோழர்கள். S.காமராஜ் மற்றும் S.R.செல்வராஜ் ஊரக கிளைகளின் பொறுப்பாளர்களாக தோழர்கள். S.சின்னசாமி மற்றும் K.தேவராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 131-வது மே தினத்தை நமது சேலம் மாவட்டத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடுவது என்றும்., பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் திரளாக பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.


 

















இந்த... தலைமை செயலகக் கூட்டத்தில்... 100-க்கும் மேற்பட்ட...
தோழர்..., தோழியர்கள்... திரளாக... கலந்து...
கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment