Wednesday, 12 April 2017

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு......!
மீண்டும்...! மருத்துவப்படி...!

Image result for medical reimbursement claim

நமது BSNL ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு., 
ரசீது இல்லாமல் (Without Voucher)... வெளிப்புற மருத்துவ சிகிச்சையை...
எடுத்துக்கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த., மருத்துவப்படியை... 
BSNL நிர்வாகம்... நிதிச்சுமை மற்றும் சிக்கன நடவடிக்கை 
என்ற பெயரில் நிறுத்தியது.

இந்நிலையில்... இந்த சலுகையை... மீண்டும் வழங்க வேண்டும்...
என... நமது NFTE சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

நமது கோரிக்கையின் ஒரு பகுதி ஏற்கப்பட்டு.,
நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மருத்துவப்
படியை... ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு., மட்டும்...
மீண்டும்... வழங்கிட... BSNL நிர்வாகம் 11-04-2017
அன்று உத்திரவிட்டுள்ளது.

இந்த உத்திரவின் படி:
  • ஓய்வு பெற்ற ஊழியர்கள்... தங்கள் பணி ஓய்வின் போது பெற்ற கடைசி மாத சம்பளத்தின்... அடிப்படைச்சம்பளம் மற்றும் அகவிலைப்படியை இணைத்து 50% சதவீதம் வழங்கப்படும்.
  • மருத்துவப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்.
  • வழக்கம் போல் வருமானவரி பிடித்தம் செய்யப்படும்.
  • 6 மாதங்கள் கழித்து மீண்டும் பரிசீலனை செய்யப்படும்.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு...!
வழங்கியதைப் போல...! பணியில்......! உள்ள......!
ஊழியர்களுக்கும்...! இந்த...! சலுகையை......!
வழங்கிட...! நமது NFTE  சங்கம்......!
கோரிக்கை வைத்துள்ளது...!

No comments:

Post a Comment