Saturday 22 April 2017

ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்...!


ஏப்ரல் 23 உலக புத்தக தினம்....!
---------------------------------------------------

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்ட போது எந்த விடுதி நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டாராம்...!
------------------------------- டாக்டர் அம்பேத்கர்.


தான், தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம்...!
------------------------------------------------ பகத்சிங்.


ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது, வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம்...!
------------------------------------- சார்லி சாப்ளின்.


எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப் படுகின்றனவோ, அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்...! 
------------------------------------- சேகுவாரா.


ஒரு புத்தகத்தை திறக்கும்போது உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம்...!
------------------------------- தோழர். சிங்காரவேலர்.


வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தைத் தேடும் மனிதனுக்கும், சோர்வில் கண் அயரப் புத்தக வாசிப்பை நாடும் மனிதனுக்கும் வேறுபாடு உண்டு...!
-------------------------------------- சி.கே.செஸ்டர்டன்.


புத்தகங்கள் மிகவும் ஆபத்தானவை. அவற்றின் மேல் கவனம், இது உங்கள் வாழ்வை மாற்றி விடக்கூடும் என எச்சரிக்கை வாசகம் பொறிப்பது நல்லது...!
---------------------------------- எலன்எக்ஸ்லே.


உங்களது தலைசிறந்த புத்தகங்களைத் திருடிச்செல்பவர்கள், உங்களது தலைசிறந்த நண்பர்களாகவே இருக்க முடியும்...!
---------------------------------------- வால்டேர்.


ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம்...!
------------------------------------------------ காந்தியார்.


தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கப்பட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தார்...!
----------------------------------------------- நேரு.


என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று...!
------------------------------------ பெட்ரண்ட்ரஸல்.

 
மனிதனின் மிகப் பெரிய கண்டு பிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் எனப்பதிலளித்தார்...! 
---------------------------- - ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்.


கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம்...!
--------------------------------- தந்தை பெரியார்.


வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம்...!
-------------------------- நெல்சன் மண்டேலா.


பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிடக் குவிந்த புத்தகங்கள் பல லட்சம்...!
-------------------------------------- வரலாறு.

குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்டபோது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்...!
-------------------------------- வரலாறு.

பதப்படுத்தப்பட்ட மனங்களின் வெளித்தோற்றத்தைப் புத்தகம் என்று அழைக்கின்றோம்...! 
------------------------------------------------------- போவீ.


புதிய புத்தகத்தை வாசிக்கும்போது புதிய நண்பன் ஒருவனைச் சந்திக்கிறோம் அதை மீண்டும் வாசிக்கும் போதோ நீண்ட கால நண்பனைச் சந்திக்கிறோம்...!                
--------------------------------------சீனப் பழமொழி.

நீங்கள் ஒரு புத்தகத்தை விற்கும் போது நீங்கள் காகிதமும் கோந்தும் மையும் விற்கவில்லை ஒரு புதிய வாழ்வையே அவருக்கு விற்கிறீர்கள்...!
--------------------------------- கிறிஸ்டோபர் மார்லே.


ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள், அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள்...!
--------------------------------------- அரேபியப் பழமொழி.


உலகிலுள்ள அனைத்துவகைத் துயரங்களின் விடுதலை ஒரு புத்தகத்தில் உள்ளது...!
--------------------------------------- கூகிவா திவாங்கோ.


போரில் கலந்து கொள்வதைவிட, கூடுதல் தைரியம் ஒரு சில புத்தகங்களை வாசிக்கத் தேவைப்படுகிறது...!
----------------------- எல்பர்ட்கிரிக்ஸ்.


புத்தகங்கள் இருந்தால் போதும் சிறைக் கம்பிகளும், கொட்டடிகளும் ஒருவரை அடைத்து வைக்க முடியாது...!
------------------------------------------ மாவீரன் பகத்சிங்.


ஒரு புத்தகத்தின் பயன் அதன் உள்ளே தேடப்படுவதைவிட வெளியே ஏற்படுத்திய தாக்கத்தை வைத்தே இருக்கிறது...!
-------------------------------- பிரடெரிக் எங்கெல்ஸ்.

காலக்கடலில் நமக்கு வழி காட்ட, அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகம்...! 
-------------------------------------------------- எட்வின் பி.விப்பிள்.

ஒரு நாட்டின் வருங்காலச் சந்ததியினர் தேடித்தேடி அடைய வேண்டிய அற்புதப் புதையல்கள் புத்தகங்களே...! 
---------------------------------- ஹென்றிதொறோ.


ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம் தான் என்றார்...!
---------------------------- வின்ஸ்டன் சர்ச்சில்.


பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக்கேட்கப் பட்டபோது புத்ககங்கள் தான் என்றாராம்...!
------------------------------------ மார்டின் லூதர்கிங்.


புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம்...!
--------------------------------------------------- சீனப் பழமொழி.


ஒரு நல்ல புத்தகம் வாசித்து முடிக்கப் படுவதே இல்லை...!
--------------------------------------- ஆர்.டி.கம்மிஸ்.

ஒரு புத்தகத்தைவிடப் பொறுமையான ஆசிரியரை நான் பார்த்தது இல்லை...!
---------------------------------- சார்லஸ் இலியட்.

விமானத்தில் போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன்? என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது! எனப் பதிலளித்தாராம்...!
---------------------------------- அறிஞர் அண்ணா.

ஒரு மிகச்சிறந்த புத்தககத்தை நீங்கள் படிக்க விரும்புகிறீர்கள் ஆனால் அது இன்னும் யாராலும் எழுதப்படவில்லை என்கிற நிலை இருந்தால் அதற்கு ஒரே தீர்வு அதை நீங்கள் எழுத வேண்டியது தான்...!
-------------------------------- டோனி மாரிஸன்.

ஒரு நல்ல புத்தகம் முடிவில்லாதது. அது பல வாழ்க்கைகளைப் பற்றி உங்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்...!
------------------------------------ ஆர்.டி.கம்மிங்.

ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்காதவன், அந்த புத்தகத்தை படிக்கத் தெரியாதவனைவிட எந்த விதத்திலும் 
உயர்ந்தவன் அல்லன்...! 
------------------- மார்க் ட்வைன் - ஜேம்ஸ்ரஸல்.

உன் மூளைக்குள் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள் தான் புத்தகங்கள்...!
----------------------------------------- ஜேம்ஸ்ரஸல்.


நம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு மந்திரக் கம்பளம் புத்தகம்...!
----------------------------------------- கரோலின் கோர்டன்.

ஒரு நல்ல வாசகனைக் கொண்டே ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காணப்படுகிறது...!
-------------------------------------- ஜார்ஜ் பெர்னாட்ஷா.

எல்லோரிடமிருந்தும்...!
கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன்...!

வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்...!
புத்தகங்களுடன்...! வாசிப்போம்...! வாழும் வரை...!   

No comments:

Post a Comment