Monday 17 April 2017

தமிழ் மாநிலக்குழு - விவாதப்பொருள்கள்



23-வது தமிழ் மாநிலக்குழுவில்... விவாதிப்பதற்காக...,
ஊழியர் தரப்பு சார்பாக... நாம் எழுப்பியுள்ள...
பிரச்சனைகள்...............!

ஊழியர் தரப்பில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள்:
  • பரிவு அடிப்படை பணிக்கான விண்ணப்பங்களை விரைந்து பரீசீலித்தல்: பரிவு அடிப்படை பணிக்கான விண்ணப்பங்கள் மாவட்ட மற்றும் மாநில மட்டங்களில் தீர்க்கப்படாமல் அதிக அளவில் நிலுவையில் உள்ளது., மற்றும் 55 புள்ளிகள்., தகுதியான விண்ணப்பங்கள் கூட திருப்பி அனுப்பப்பட்டுள்ளது (அ) நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும்... 2015 - 2016 ஆம் ஆண்டிற்கான பட்டியலும் வெளியிடப்படவில்லை., எனவே... மாநில நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மனிதாபிமான அடிப்படையில் இப்பிரச்சினைகளை விரைந்து பரிசீலிக்க வேண்டுகிறோம்.
  • மாநில நிர்வாகத்தின் உத்திரவை அமுல்படுத்து: மாநில நிர்வாகம்., ஒப்பந்த ஊழியர்களுக்கு EPF UAN Card, ESI E Pachan Card, சம்பளப் பட்டியல், போனஸ், பிரதி மாதம் 7-ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும்., என... சட்டரீதியான வழிகாட்டும் உத்திரவுகளை, மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கியும் கூட., பல மாவட்டங்களில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மேலும்... ஒரு சில பகுதிகளில்... ஒப்பந்ததாரர்கள் நமது BSNL நிறுவனத்தின் தொகையை சூறையாடி வருகிறார்கள். எனவே மாநில நிர்வாகம் தலையிட்டு கண்டிப்புடன் செயல்படுத்துமாறு மாவட்ட நிர்வாகங்களை வலியுறுத்த வேண்டுகிறோம். இவற்றை கண்காணிப்பதற்காக குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.
  • கையேடு, துண்டு மற்றும் டம்ளர் ஆகியவற்றை வாங்கிட வழங்கும் தொகையை உயர்த்திட வேண்டும்: சோப்பு, துண்டு, டம்ளர் மற்றும் கையேடு ஆகியவற்றை வாங்குவதற்காக..., தற்போது குரூப் சி ஊழியர்களுக்கு ரூ. 500/- ம்., குரூப் டி ஊழியர்களுக்கு ரூ. 300/- ம்., வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகையை அனைத்து ஊழியர்களுக்கும் ரூ. 1000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
  • 94 நிலையில் உள்ள GSM செல் எண்களை வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் வகையில் (CYMN - Choose Your Mobile Number) வழிவகை செய்யப்படவேண்டும்: நமது BSNL..., தமிழக வாடிக்கையாளர்களை பொறுத்த மட்டில் 944 மற்றும் 94 நிலையில் உள்ள செல் எண்களை தான் விரும்புகிறார்கள். மேலும்... அதுதான் BSNL எண்களிற்கான அடையாளத்தை தரும் என நம்புகின்றனர். ஆனால் கடந்த 4 வாரங்களாக தமிழகம் முழுவதும் CYMN-ல் 94 நிலையில் உள்ள எண்கள் இல்லை. 8300 என துவங்கும் எண்களே உள்ளது. அதே நேரத்தில்... நம் முகவர்கள் 94 நிலையில் உள்ள எண்களை வழங்குகிறார்கள். எனவே 94 நிலையில் உள்ள எண்களை நம்முடைய CSC-களிலும் கிடைக்குமாறு வழிவகை செய்ய வேண்டும்.
  • விற்பனை பிரிவில் (Sales Team) பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள... சேவை CUG சிம்மிற்கு., பேசும் நேரத்திற்கான (Talk Time) தொகையை உயர்த்திட வேண்டும்: விற்பனை பிரிவில் பணி புரியும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சேவை CUG சிம்மிற்கு ரூ. 200/- மதிப்பிலான பேசும் நேரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் Udaan பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கூடுதலாக ரூ. 300/- மதிப்பிலான பேசும் நேரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை (அ) வசதியை விற்பனை பிரிவில் பணி புரியும் ஊழியர்களுக்கும் விரிவு படுத்தப்படவேண்டும்.
  • NEPP பதவி உயர்வில் உள்ள அனாமலியை தீர்க்கப்படவேண்டும்: NEPP பதவி உயர்வு உத்திரவில் உள்ள அனுமதிக்கப்பட்ட நிபந்தனைப் படி OTBP / BCR பதவி உயர்வை விட்டுக்கொடுத்து (forego)., NEPP பதவி உயர்வு பெற்ற ஒரு சில ஊழியர்களுக்கு சம்பள அனாமலி ஏற்பட்டுள்ளது. அந்த ஊழியர்கள் NEPP பதவி உயர்வை தவிர்த்து., மீண்டும் OTBP / BCR பெறுவதற்கான நடைமுறையை நமது மாநிலத்தில் பின்பற்றப்படவில்லை... எனவே... பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உத்திரவில் உள்ளபடி ஒருமுறை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். 01-10-2000 முதல் 01-10-2004 வரை OTBP / BCR பெற்ற ஊழியர்களை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.                
  • சந்தைப்படுத்தும் பிரிவுக்கு (Marketing Section) கீழ் உள்ள விஜய் திட்ட பிரிவில் (Project Vijay) பணி புரியும் ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவது சம்பந்தமாக: தமிழ் மாநில சந்தைப்படுத்தும் பிரிவுக்கு கீழ் உள்ள விஜய் திட்ட பிரிவில் பணி புரியும் ஊழியர்களுக்கு., பாண்டிச்சேரி தவிர மற்ற மாவட்டங்களில் செப்டம்பர் - 2015 முதல் இன்று வரை ஊக்க ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே...! உடனடியாக...! ஊக்க ஊதியத்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • தொலைத்தொடர்பு துறை (DOT) மூலமாக பெற்ற வீட்டுக்கடன் (HBA) மற்றும் வட்டியை செலுத்திய ஊழியர்களுக்கு விற்பனை பத்திரத்தை (Sale deed) உடனடியாக வழங்கவும்: தொலைத்தொடர்பு துறை மூலமாக ஊழியர்கள் பெற்ற வீட்டுக்கடன் (HBA) மற்றும் அதற்கான வட்டியை முழுமையாக செலுத்தி இருந்தால் அந்த வீட்டிற்கான விற்பனை பத்திரத்தை உடனடியாக விடுவித்து தர வேண்டும். (உதாரணம்: ஸ்ரீமதி. V.விஜயலட்சுமி, STM(O)., HR.NO: 198200656., கோவில்பட்டி. அவர்கள் 2014 ஆகஸ்ட் மாதம் வீட்டுக்கடனுக்கான அசல் மற்றும் வட்டியை செலுத்திவிட்ட நிலையில் இதுவரை விற்பனை பத்திரம் மற்றும் NOC வழங்கப்படவில்லை)
  • தமிழ் மாநிலத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள விதி - 8 (Rule - 8) மாற்றல்களை பரிசீலனை செய்யவும்: நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள விதி - 8 மாற்றல்களை ஒரே முறையாக மாற்றல் வழங்க பரிசீலனை செய்ய வேண்டும்.
  • மாநிலக்குழு வழிகாட்டுதல் படி சந்தைப்படுத்தும் பிரிவு (Marketing Section) மூலமாக அனைத்து ஊழியர்களுக்கும் BAG வழங்க வேண்டும்: மாநிலக்குழு வழிகாட்டுதல் படி தமிழ் மாநிலத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் Marketing Bag., இந்த 2016 - 2017 நிதி ஆண்டுக்குள் வழங்கப்படவேண்டும்.
  • ஊழியர் குடியிருப்பு, IQ, தொலைபேசி நிலையம் மற்றும் அலுலவக கட்டிடங்கள் பராமரிப்பு: தமிழகம் முழுவதும் உள்ள ஊழியர் குடியிருப்பு, IQ, தொலைபேசி நிலையம் மற்றும் அலுலவக கட்டிடங்களை பராமரிப்பது  என்பது மிகவும் முக்கியமானது என்ற அடிப்படையில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பராமரிப்பு செய்ய வேண்டும்.
  • விதிவிலக்கு மாற்றல்களை உடனடியாக அமுல் படுத்தப்பட வேண்டும்: அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின்., தகுதியான பிரதிநிதிகளுக்கான விதிவிலக்கு மாற்றல் பற்றிய கார்ப்பரேட் அலுவலகத்தின் உத்திரவு எந்தவித காரணமும் இல்லாமல் நிலுவையில் உள்ளது. எனவே...! இந்த உத்திரவை உண்மையான முறையில் எவ்வித காலதாமதம் இல்லாமல் உடனடியாக அமுல் படுத்தப்பட வேண்டும்.
  • மருத்துவக்குழு உருவாக்கம்: ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் மருத்துவ பில்கள் குறிப்பிட்ட காலத்திற்கும் மேலாக நிலுவையில் உள்ளது. உரிய காலத்தில் தீர்வு என்பது மிகவும் அவசியம். மேலும்...! மாவட்டங்களில் இருந்து மருத்துவ பில்கள் தாமதமாக அனுப்பப்படுவதால்., மாநில அலுவலகத்தில் முறைபடுத்துவதற்கு கால தாமதம் ஆகிறது. மாநிலக்குழு முடிவின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட., மாநில அளவிலான மருத்துவக்குழு தற்போது செயல்படுவதில்லை., எனவே...! மருத்துவ பில்கள் தாமதம் இல்லாமல் தீர்வு காண்பதற்கு மீண்டும் மருத்துவக்குழு உருவாக்கப்படவேண்டும்.
  • இணையச்சு மீட்டுருவாக்கி நிலையங்களின் (Coaxil Repeater Stations) கட்டுப்பாட்டை மாற்றி அமைக்க வேண்டும்: அனைத்து இணையச்சு மீட்டுருவாக்கி நிலையங்களை (Coaxil Repeater Stations) STR கட்டுப்பாட்டிலிருந்து தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
  • மாநில நிர்வாகத்தால் வங்கிகளுக்கு அனுப்பக்கூடிய பணம் தாமதம் ஆவதால் அபராத வட்டி செலுத்துவது சம்பந்தமாக: நமது ஊழியர்கள் வங்கிகளில் MOU அடிப்படையில் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை மாநில நிர்வாகம் தாமதமாக செலுத்துவதால்., அபராத வட்டி செலுத்த வேண்டும் என்றும்., கடன் முடிந்தும் அறிவிப்பு என்ற பெயரில் பெரும்பான்மையான வங்கி கிளைகள் ஊழியர்களை துன்புறுத்துகின்றன. எனவே...! மாநில நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
  • மாவட்ட அளவில் கோர் கமிட்டி உருவாக்கப்பட வேண்டும்: BSNL நிறுவனம் இன்றைய சூழ்நிலையில் தனியார் நிறுவனங்களுடன் கடுமையாக போட்டியிட வேண்டிய நிலையில் உள்ளது. நிர்வாகம் சேவையை பற்றி ஊழியர்களிடம் விவாதம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும்., இந்த போட்டி சூழ்நிலையில் நிர்வாகம் மற்றும் ஊழியர்களும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. எனவே...! மாவட்ட அளவில் நிர்வாக தரப்பு மற்றும் ஊழியர் தரப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு கோர் கமிட்டி உருவாக்கப்பட வேண்டும். இக்கமிட்டியின் முக்கிய நோக்கம் என்பது போட்டி காலங்களில்., வணிகத்தை அதிகப்படுத்தி., லாபம் பெருக்கும் மையமாக மாற்றிடும்.
  • சேலம் மாவட்டத்தில் ஓய்வு கால பலன்கள் வழங்குவது சம்பந்தமாக: சேலம் மாவட்டத்தில் பணி புரிந்து., ஓய்வு பெறும் ஒரு சில ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வுக்கால பலன்கள்., ஜாதி சான்றிதழ் பிரச்சனையை காரணமாக வைத்து., நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பாதிப்படைந்த ஒரு சில ஊழியர்கள் நீதிமன்றம் மூலமாக தங்கள் ஓய்வூதிய பலன்களை பெற்றனர். இந்த நீதிமன்ற தீர்ப்பினை மற்ற பாதிப்படைந்த ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தி அவர்களுடைய ஓய்வூதிய பலன்களை வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்.     
  • 7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமுல்படுத்து: நமது மாநில அளவில் 3 TSM ஊழியர்கள் தொலைத்தொடர்பு துறையில் (DOT) பணியாற்றி வருகிறார்கள். அந்த பகுதி ஊழியர்களுக்கு., 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் புதிய ஊதியத்தை அமுல் படுத்திட வேண்டும். 
  • தமிழகம் முழுவதும்  அலுவலக பராமரிப்பு பணிக்கான (House Keeping Services) ஒப்பந்தத்தை ஒரே மாதிரியாக பின்பற்ற வேண்டும்: அலுவலக பராமரிப்பு பணிக்கான (House Keeping Services) ஒப்பந்தம் தமிழகம் முழுவதும் 17 மாவட்டங்கள், CGM அலுவலகம், RGM TTC மற்றும் வளர்ச்சி (Development Office Chennai) அலுவலகம் ஆகியவற்றில் அமுல் படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில்., வேலையின் அளவு (வேலை நேரம்)., வேலைக்கான ஆட்கள் புள்ளியின் அடிப்படையில், வேலைக்கான சம்பளம், EPF, ESI, போனஸ் மற்றும் இதர சலுகைகள் முறையாக குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால்...! CGM அலுவலகம், RGM TTC மற்றும் வளர்ச்சி (Development Office Chennai) அலுவலக ஒப்பந்தங்களில்., இது குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. ஆய்வு செய்த போது ஒப்பந்தங்கள் சிவில் பகுதியில் இருந்து அமுல் படுத்தப்பட்டுள்ளது. கண்டறியப்பட்டது., இந்த ஒப்பந்தத்திற்கும் சிவில் பகுதிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை., எனவே...! இந்த ஒப்பந்தத்தை மாநில நிர்வாகமே அமுல்படுத்திடவும்., மேலும்...! தமிழகம் முழுவதும் அலுவலக பராமரிப்பு பணிக்கான (House Keeping Services) ஒப்பந்தத்தை ஒரே மாதிரியாக அமுல் படுத்திடவும் வேண்டும்.      
  • உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஊழியர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தினை பிடித்தம் செய்வது நிறுத்துவது தொடர்பாக: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் DoP&T வெளியிட்ட உத்திரவு படி (உத்திரவு எண்: F.No.18/03/2015-Estt.(Pay-l) dated 02-03-2016) நிர்வாகம் தவறுதலாக., ஊழியர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியத்தினை (அ) தொகையை பிடித்தம் செய்யக்கூடாது என்ற வழிகாட்டுதலை நமது கார்ப்பரேட் அலுவலகம் அமுல்படுத்தும் நிலையில் உள்ளது. மேலும்...! இப் பிரச்சனை 35-வது தேசியக் குழுவில் விவாதிப்பதற்காக உள்ளது. நமது தமிழ் மாநிலத்தில் NEPP பதவி உயர்வின் காரணமாக RM மற்றும் குரூப் D ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தமும்., TM பதவி உயர்வின் போது., TM காலி இடங்கள் இல்லாத காரணத்தினால் தற்காலிகமாக  LM ஊதியம் (2750-4400) வழங்கப்பட்டு., பிறகு TM காலி இடங்கள் உருவாக்கப்பட்டு., TM பதவி உயர்வின் காரணமாக ஊதியம் பொருத்தும் போது ஏற்பட்ட தவறின் காரணமாக தற்போது TM ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தமும், ஊதிய குறைவும் ஏற்படுகிறது. இதனால்...! ஓய்வு பெறும் போது ஓய்வூதியம் மற்றும் ஓய்வு கால பலன்கள் குறைகிறது. இதனால் பாதிப்படைந்த ஊழியர்களுக்கு மன அழுத்தமும்., பணத்தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. எனவே...! மாநில நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மாநில அளவிலேயே முடிவு எடுத்து., ஊதிய பிடித்தத்தை நிறுத்திட வேண்டும்.

No comments:

Post a Comment