Tuesday 11 April 2017

20 மற்றும் 30 வருட சேவைக்கு - சிறப்பு பரிசு


சேலம் மாவட்ட சேமநலநிதிக்குழுவின்... 25-வது கூட்டம்...
09-03-2017 அன்று மாலை 03-30 மணிக்கு, சேலம் மாவட்ட முதன்மை
பொது மேலாளர்... அறையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்... சேமநலநிதிக்குழுவில்...
20 வருடம் மற்றும் 30 வருடம் உறுப்பினராக உள்ள...
ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை., கௌரவிக்கும் விதமாக...
அவர்களுக்கு., சிறப்பு பரிசு வழங்கிட வேண்டும் என்று... 
நமது NFTE - BSNL சங்கத்தின்... சார்பாக...
கோரிக்கை வைத்தோம்.

நமது கோரிக்கை ஏற்கப்பட்டு..., 20 வருடம் உறுப்பினராக 
உள்ள ஊழியர்களுக்கு, சிறப்பு பரிசாக ரூ. 2000/- மற்றும் 30 வருடம்
உறுப்பினராக உள்ள ஊழியர்களுக்கு, சிறப்பு பரிசாக
ரூ. 3000/- வழங்கிட முடிவு எடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில்... 11-04-2017 இன்று... நமது சேலம் மாவட்ட
நிர்வாகம்... 20 வருடம் உறுப்பினராக உள்ள ஊழியர்களுக்கு ரூ. 2000/-
மற்றும் 30 வருடம் உறுப்பினராக உள்ள ஊழியர்களுக்கு...
ரூ. 3000/- வழங்குவதற்கான... உத்திரவை...
வெளியிட்டுள்ளது.

இந்த உத்திரவின் படி...
  • 20 வருடம் உறுப்பினராக உள்ள 490 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ. 2000/- வீதம் ரூ. 9,80,000/- வழங்கப்படும்.
  • 30 வருடம் உறுப்பினராக உள்ள 395 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ. 3000/- வீதம் ரூ.11,85,000/- வழங்கப்படும்.


நமது கோரிக்கையை ஏற்று., உத்திரவு வெளியிட்ட மாவட்ட...
நிர்வாகத்திற்கு., நமது...! நன்றி...! பாராட்டுக்கள்...!

மேலும்... ரூ. 2000/- மற்றும் ரூ. 3000/- சிறப்பு பரிசு பெற... 
வேண்டிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் 11-04-2017 முதல்...
பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள விடுப்புப்
பிரிவில் பெற்றுக் கொள்ளலாம். தங்களது
அடையாள அட்டையை தவறாமல்
எடுத்து செல்லவும்.

உத்திரவு மற்றும் பட்டியல்:




No comments:

Post a Comment